2025 மே 21, புதன்கிழமை

ஆயுள் காப்புறுதித் துறையை ஊக்குவிக்கும் வகையில் SLIM உடன் AIA ஒப்பந்தம்

Editorial   / 2018 மே 25 , மு.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சந்தைப்படுத்தல் துறையில், சுமார் 50 வருட காலமாக சேவையாற்றி வரும் தேசிய சந்தைப்படுத்தல் நிறுவனமான இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM), ஆசியாவின் மிகப்பெரிய சுயாதீன பொதுப் பட்டியலிடப்பட்ட Pan-Asian Life Insurance குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான AIA Insurance Lanka PLC உடன் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.  

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைய, AIA, ஆயுள் காப்புறுதி சந்தைப்படுத்தல் துறையில் பொருத்தமான தொழிற் தகைமைகள் கொண்ட மூன்று பிரிவுகளிலான மிகச்சிறந்த காப்புறுதி விற்பனை ஊழியர்களை SLIM உடன் இணைக்க இருக்கிறது.   

SLIM ஆயுள் காப்புறுதி விற்பனைக்கான சான்றிதழ் பாடநெறி (CLIM), ஆயுள் காப்புறுதி விற்பனைக்கான உயர்மட்டப் பாடநெறி (ALIM) மற்றும் ஆயுள் காப்புறுதி விற்பனைக்கான டிப்ளோமா பாடநெறி (DLIM) ஆகிய மூன்று மட்டங்களில் தொழிற் திறமைகளுக்கு தங்கம், பிளட்டினம் மற்றும் Supreme Club ஆகிய நிலைகளை அடைந்துகொண்ட AIA விற்பனைத் துறையில் ஈடுபட்டுள்ள உத்தியோத்தர்களுக்கு, பிரதானமாகக் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   

திறமைகளை மேம்படுத்துதல், தொழிற்துறையின் சிறந்த சந்தைப்படுத்தல் அதிகாரியாகத் தனது அறிவையையும் தன்னம்பிக்கையையும் விருத்தி செய்தல், தனிப்பட்ட வளர்ச்சியைப் பெற்றுக்கொள்ளல், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அவர்களின் பங்களிப்பை அதிகரித்தல் என்பன இந்தப் பாடநெறிகள் மூலம் கிடைக்கும் நன்மைகளாகும்.   

இந்த வேலைத்திட்டமானது கொழும்பு, கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள SLIM மத்திய மற்றும் அங்கிகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் செயற்பட இருக்கிறது. இதுவரை 525 க்கும் அதிகமான விண்ணப்பதாரிகள் இதில் இணைந்துகொள்ளத் தயாராக இருக்கின்றனர்.  

இந்த விடயம் பற்றிக் கருத்து வெளியிட்ட SLIM நிறுவனத்தின் தலைவர் பிரதீப் எட்வட், “SLIM நிறுவனத்தின் வேலைத் திட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கல்விப் பயணத்தில் குழுமத்துறையில் எந்தவோர் ஊழியருக்கும் தனது தொழில் பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லவும், உலகளாவிய ரீதியிலான தொழில் வல்லுநர்களுடன் தோளோடு தோள் நின்று போட்டியிடும் வாய்ப்பையும் பெற்றுக்கொடுக்கிறது” என்று கூறினார்.   

AIA Insurance Lanka PLC யின் பிரதம நிறைவேற்று அதிகாரி பங்கச் பெனர்ஜி, இது சம்பந்தமாகக் கருத்து வெளியிடுகையில், “நாட்டின் சந்தைப்படுத்தல் துறை முன்னோடியாக, குழுமப் பிரிவுகளில், விசேடமாக தொழில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் SLIM நிறுவனம் நெகிழ்வுடன் செயற்பட்டு வருகின்றது. எமது மிகச்சிறந்த விற்பனை ஊழியர்களுக்கு இந்த வேலைத் திட்டத்தில் பங்குகொள்ளும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், வாடிக்கையாளர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்” என்று கூறினார்.  

AIA Sri Lanka Academy யின் இணை பணிப்பாளர் திமுத்து பியசேன கருத்து வெளியிடுகையில், “SLIM நிறுவனத்துடன் கைகோர்ப்பதன் மூலம், எமது மிகச்சிறந்த விற்பனை உத்தியோகத்தர்களின் திறன்களை மேலும் விருத்தியடையச் செய்ய முடியும். அது அவர்களுக்கு வித்தியாசமான சிந்தனை முறையையும் சோம்பலின்றிச் செயற்படுவதற்கான ஊக்குவிப்பையும் பெற்றுக்கொடுக்கும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .