2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு உதவும் Hatch

Editorial   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு இணைந்த அலுவலக இடப்பகுதி, வியாபாரங்களின் காப்பகமாக Hatch அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.   

கொழும்பு நகரின் மய்யப்பகுதியான கோட்டை பிரதேசத்தில் இது அமைந்துள்ளதுடன், Hatch Colombo இன் தலைமையகத்தினூடாக பாரம்பரியம் புதியதுடன் சங்கமிக்கின்றது என்பது வெளிப்படுத்தப்படுகின்றது.

பாரம்பரிய கட்டடத்தில் அமைந்துள்ளதுடன், 1900ஆம் ஆண்டுகளில் கொழும்பில் அமைந்துள்ள மிகவும் உயர்ந்த கட்டடமாக இது அமைந்திருந்தது. 60,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த நிலையத்தில் 1000க்கும் அதிகமானவர்கள் அடங்கியிருப்பார்கள் என்பதுடன், சந்திப்பு அறைகள், கேட்போர்கூடங்கள், நிகழ்வுகளுக்கான பகுதிகள், உணவகங்கள், ஓய்வு பகுதிகள், நவீன தொழில்நுட்ப வசதிகள், உறங்கும் பகுதிகள் கூட அடங்கியிருக்கும்.  

நெகிழ்ச்சியான அங்கத்துவத் திட்டங்களுடன், நிகழ்வுப் பகுதியை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளமுடியும். அதனை பகிர்ந்து கொள்ள முடியும் என்பதுடன், பிரத்தியேகமான மேசை ஏற்பாடுகளையும் மேற்கொள்ளலாம். பிரத்தியேகமான சந்திப்பு அறைகளும் காணப்படுகின்றன. தனிநபர்கள் பகல், மாலை, வார இறுதி நாட்களில் தமக்கு தேவைப்படும் பகுதிகளை அணுக முடியும்.  

வர்த்தக, தொழிற்துறை அமைச்சின் பிரகாரம், தேசத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகள் அமைந்துள்ளன. நாட்டில் காணப்படும் மொத்த வியாபாரங்களில் 75 சதவீதத்துக்கு அதிகமானதாக இவை அமைந்துள்ளன.

அமைச்சால் அண்மையில் வெளியிடப்பட்டிருந்த ஆண்டறிக்கையிலிருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்களின் பிரகாரம், நாட்டின் மொத்தத் தொழில் வாய்ப்பில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகள் வழங்குகின்றன.

மொத்த தேசிய உற்பத்தியில் இது 52 சதவீதமாக அமைந்துள்ளது. ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கான காப்பகங்கள், அங்கத்துவ அடிப்படையிலான சுயாதீன பணியிட இடவசதிகளுக்கான கேள்வி அதிகரித்த வண்ணமுள்ளன.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .