2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி வெற்றியாளராக தெரிவு

Freelancer   / 2023 டிசெம்பர் 11 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் துணை நிறுவனமான ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி, இந்தியாவின், மும்பை நகரில் நடைபெற்ற நான்காவது Emerging Asia காப்புறுதி ஒன்றுகூடல் மற்றும் விருதுகள் 2023 நிகழ்வில், காப்புறுதி பரவலாக்கத்துக்கா சிறந்த தந்திரோபாயங்கள் – இலங்கை எனும் விருதை சுவீகரித்தது.

இந்திய வர்த்தக சம்மேளனத்தினால் (ICC) ஏற்பாடு செய்யப்பட்ட Emerging Asia காப்புறுதி ஒன்றுகூடல் மற்றும் விருதுகள் நிகழ்வினூடாக, ஆசியாவின் சிறந்த காப்புறுதி சேவை வழங்குநர்களின் சாதனைகளை கௌரவிக்கப்படுகின்றது. பிராந்தியத்தில் காப்புறுதியை ஊக்குவிப்பதற்கு பங்களிப்பு வழங்கும் முயற்சிகளை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது.

கிளைகளின் எண்ணிக்கை, முகவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் வளர்ச்சி வீதம், CAGR திட்டங்களின் எண்ணிக்கை மற்றும் சமூகத்தினுள் காப்புறுதி அணுகலை அதிகரிக்கச் செய்வதற்காக டிஜிட்டல் செயற்பாடுகளை பின்பற்றல் போன்ற பல்வேறு முக்கியமான காரணிகளை கவனத்தில் கொண்டு கடுமையான வினைத்திறன்சார் மதிப்பீட்டைத் தொடர்ந்து, ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சிக்கு இந்த விசேட ICC விருது வழங்கப்பட்டது. இலங்கைக்கு மேலதிகமாக, பங்களாதேஷ், பூட்டான், மியன்மார், நேபாளம், தாய்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இதில் அடங்கியிருந்தன. இந்தியாவின் PriceWaterhouseCoopers (PwC) இனால் வெற்றியாளர் தெரிவு செயற்பாடுகள் மேற்பார்வை செய்யப்பட்டிருந்தன.

ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி தவிசாளர் ரமல் ஜாசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இந்த பெருமைக்குரிய விருது என்பது, எமது அணியினரின் அர்ப்பணிப்பு மற்றும் ஒப்பற்ற ஈடுபாடு ஆகியவற்றுக்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இந்திய வர்த்தக சம்மேளனத்தினால் வழங்கப்படும் இந்த கௌரவிப்பினூடாக, தொடர்ந்தும் புத்தாக்கமாக இயங்கும் எமது எதிர்பார்ப்புக்கு வலுவூட்டப்படுவதுடன், புத்தாக்கமான ஆயுள் காப்புறுதித் தீர்வுகளை நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்கு பங்களிப்புச் செய்ய உதவியாகவும் அமைந்திருக்கும்.” என்றார்.

ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதம அதிகாரியான கலாநிதி. கெளும் சேனநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “நிறுவனத்துக்கும் நாட்டுக்கும் கிடைத்த இந்த கௌரவம் தொடர்பில் நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். எமது ஊழியர் வளங்களை மேம்படுத்துவதில் நாம் தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொண்டு வருவதுடன், வாடிக்கையாளர்களை மையப்படுத்திய பல்வேறு தந்திரோபாயங்களை பின்பற்றுவது தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றோம். அதனூடாக, அனைவராலும் ஆயுள் காப்புறுதியை அணுகக்கூடியதாக இருக்கும். இந்த நெருக்கடியான காலப்பகுதியில் மீண்டெழுந்திறனுடனான எமது செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்துக்கான நோக்கு பெரும் வாய்ப்புகள் நிறைந்ததாக அமைந்துள்ளன. ஆயுள் காப்புறுதித் துறையில் சிறப்பை எய்தும் இலக்கை நோக்கி நாம் தொடர்ந்தும் இயங்குவோம்.” என்றார்.

ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சியின் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி நிலுஷன் குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “காப்புறுதி பரவலாக்கத்தில் நாம் மேற்கொண்டிருந்த மூலோபாய செயற்பாடுகளில் காண்பித்திருந்த எமது முயற்சிகள், சாதனைகள் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இந்த கௌரவிப்பு கிடைத்துள்ளது. பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு காப்புறுதித் தீர்வுகளை வழங்குவது மற்றும் கட்டுப்பணக் கொடுப்பனவுகளை டிஜிட்டல் முறையில் செலுத்தல் முதல் பிராந்திய விளையாட்டு நிகழ்வுகளினூடாக கிராமத்து மற்றும் பின்தங்கிய சமூகங்களுடன் தொடர்புகளை பேணுவது வரை, காப்புறுதி விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். மேலும், PwC போன்ற முன்னணி நிறுவனத்தினால் எமது சாதனைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டமையினூடாக, எமது சாதனைகள் மீள உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சிக்கு, ஆயுள் காப்புறுதியை பொது மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான நோக்கு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியன மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

வாழ்க்கைக்கு காப்புறுதியை வழங்குவதற்கான அர்ப்பணிப்பை கொண்டிருப்பதையிட்டு ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி பெருமை கொள்வதுடன், உலகத் தரம் வாய்ந்த இடர் காப்பீட்டுத் தீர்வுகளை சுகாதார காப்புறுதி, தவணை காப்புறுதி, கல்வி, முதலீடு, ஓய்வூதியம், குழுக் காப்புறுதி, கடன் பாதுகாப்பு மற்றும் நிவாரணத் திட்டங்கள் போன்றவற்றினூடாக வழங்குகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X