Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரு மாத காலப்பகுதியில் நாட்டில் பணவீக்கம் அதிகரித்திருந்ததுடன், பொருளாதாரத்தில் கேள்வி அடிப்படையிலான அதிகரிப்பு காணப்பட்டமை வெளிப்பட்டிருந்தது. மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட விநியோகத்தடைகள் மற்றும் வரிக்கட்டமைப்பில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த மாற்றங்கள் போன்றன பணவீக்கம் கடந்த இருமாதங்களில் உயர்வடைவதில் பங்களிப்பு வழங்கியிருந்ததாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த இரு மாதங்களில் வலுப்பிறப்பாக்கம், சுற்றுலா மற்றும் துறைமுகம் தொடர்பான சேவைகள், நிர்மாணத்துறை, முதலீட்டு பொருட்கள் இறக்குமதி மற்றும் உற்பத்தியாளர்கள் மற்றும் சேவைகள் போன்றவற்றின் கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டிகள் போன்றன உயர்வை பதிவு செய்திருந்தன.
2016 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பின்பற்றப்பட்டிருந்த நாணய கடுமையாக்கல் செயன்முறைகள் மூலமாக வட்டி வீதங்களும் அதிகரிக்கப்பட்டிருந்தன. உள்நாட்டு நாணயச் சந்தையில் ரூபாயின் திரள்வுத் தன்மை குறைந்த மட்டத்தில் தொடர்ந்திருந்தது. வட்டி வீதங்களில் அதிகரிப்பு பதிவாகியிருந்த போதிலும், வணிக வங்கிகளின் மூலமாக தனியார் துறைக்கு வழங்கப்பட்டிருந்த கடன்களில் அதிகரிப்பு பதிவாகியிருந்தது.
இதன் பிரகாரம் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் நிலையான வைப்பு வசதிக்கட்டணம் (Standing Deposit Facility Rate) மற்றும் நிலையான வழங்கல் வைப்புக் கட்டணம் (Standing Lending Facility Rate) ஆகியவற்றை 50 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரிப்பதற்கு தீர்மானம் மேற்கொண்டிருந்தது. இதன் மூலம் முறையே 7.00 சதவீதம் மற்றும் 8.50 சதவீத அதிகரிப்புகளை நடைமுறைப்படுத்தியுள்ளதாக நாணயச் சபை அறிவித்துள்ளது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago