2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இலங்கை சர்வதேச மரம்சார் கண்காட்சிக்கு JAT ஹோல்டிங்ஸ் அனுசரணை

Gavitha   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்காவது தடவையாகவும் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற இலங்கை சர்வதேச மரம்சார் கண்காட்சி 2016 (Sri Lanka Wood International Expo 2016) நிகழ்வுக்கு JAT ஹோல்டிங்ஸ் நிறுவனம் அனுசரணை வழங்கியது.   

JAT ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஈலியன் குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “பெருமளவிலானோர் வருகைதந்த இந்தக் கண்காட்சியில் பங்கேற்பதானது எமக்கு மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமைந்தது. இலங்கையின் மர வேலைப்பாடுகள் துறையில் உள்ள நிறுவனங்கள் தமது வணிகத்தை விஸ்தரித்துக் கொள்வதற்கும் இத்துறையிலான புத்தாக்கங்கள் தொடர்பில் தமது அறிவை விருத்தி செய்து கொள்வதற்கும் மிகச் சிறப்பானதொரு வாய்ப்பை இக்கண்காட்சி வழங்கியது’ என்றார்.  

10க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட கம்பனிகள் மரத்துடன் தொடர்புபட்ட உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் காட்சிப்படுத்தும் விதத்திலமைந்த “சர்வதேச மரம்சார் கண்காட்சி 2016” ஆனது இத்துறையுடன் தொடர்புபட்ட பங்குதார தரப்பினர் மற்றும் பொது மக்களுக்கு வணிக-வணிக (B2B) மேற்கொள்வதற்கான இடைத்தொடர்புடைய மற்றும் ஆரோக்கியமான தளமேடை ஒன்றை அமைத்துக் கொடுத்தது.   

மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்தக் கண்காட்சியானது மனதைக் கவரும் வகையிலான பரந்த வகைகளிலான மரம் மற்றும் மர வேலைப்பாடுகள் சார்ந்த இயந்திரம், தளபாட வன்பொருட்கள், பொருத்துக்கள் மற்றும் சேர்மானங்கள், மரங்கள் மற்றும் வெட்டுமரங்கள், மரத் துகளினால் செய்யப்பட்ட பலகைகள், ஆனுகு பலகைகள், பெனல்ஸ் மற்றும் பிளைவூட், மின் உபகரணங்கள், பல்வர்ண மரவேலை, வனீர் வகைகள் மற்றும் லெமினேட், மேற்பூச்சு மற்றும் ஒட்டும் தன்மையுள்ளப் பொருட்கள் போன்ற பெயர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மேலும் பல உற்பத்திகளை காட்சிப்படுத்தியது.   

ஷோ கிராஃப்ட் இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கண்காட்சி, அங்கு வருகைதருகின்ற பார்வையாளர்களைப் பல்வேறுபட்ட வழிமுறைகளின் ஊடாக தம்முடைய அறிவை விருத்தி செய்து கொள்வதுக்கான சிறந்ததொரு வாய்ப்பை வழங்கியது.

இங்கு இயந்திர சாதனங்கள் மற்றும் கருவிகளை இயக்கிக் காண்பிப்பதை நேரடியாக பார்ப்பதற்கு பார்வையாளர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டதுடன், பயிற்சி அமர்வுகளில் பங்குபற்றுவதற்கும், விலையிடலை ஒப்பீட்டுப் பார்ப்பதற்கும், புத்தாக்க முறைகள் பற்றி அறிந்து கொள்ளவும், தமது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும், தமது கேள்விகளை முன்வைத்து பெறுமதியான பின்னூட்டல் பதில்களைப் பெற்றுக் கொள்வதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X