Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 09 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி சரிவைப் பதிவு செய்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் மாலைதீவுகள் போன்ற நாடுகளும் பிராந்தியத்தில் சரிவான ஏற்றுமதிப் பெறுமதிகளைப் பதிவு செய்துள்ளன என உலக வங்கியினால் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.
ஏற்றுமதியைப் பொறுத்தமட்டில் தெற்காசிய நாடுகளை இரு பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ள முடியும். அதில் இந்தியா, பூட்டான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் 2000 - 2013 வரையான காலப்பகுதியில், ஏற்றுமதி இரட்டை இலக்க அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது. இதேவேளை, பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலைதீவுகள் போன்ற நாடுகள் சரிவைப் பதிவு செய்திருந்தன.
பிராந்தியத்தைச் சேர்ந்த நாடுகள் தமது ஏற்றுமதிகளைப் பன்முகப்படுத்துவதில் குறைந்தளவு வளர்ச்சியைப் பதிவு செய்திருந்ததுடன், புதிய சந்தைகளை இனங்காண்பதில் வெற்றிகரமானப் பெறுபேறுகளை எய்தியிருந்தன எனவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .