Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 14 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீமெந்து உற்பத்தியாளரும், இலங்கையின் உள்நாட்டு சந்தையில் முதன்முதலாக சூழல் நட்புறவான “பசுமை” சீமெந்தினை அறிமுகம் செய்த நிறுவனமுமான INSEE சீமெந்து, தொழிற்றுறை கழிவுகளை மேலாண்மை செய்யும் நோக்கில் அண்மையில் INSEE Ecocycle எனும் புதிய முயற்சியை அங்குரார்ப்பணம் செய்திருந்தது. INSEE குழுமத்தின் தொழிற்றுறை கழிவு மேலாண்மையாக INSEE Ecocycle காணப்படுகிறது.
Geocycleஆனது ஹொல்சிம் (லங்கா) லிமிடெட்டின் ஒரு பிரிவாகும். ஹொல்சிம், Siam City சீமெந்து (லங்கா) லிமிடெட் ஆக மாறிய சந்தர்ப்பத்தில் Geocycleஆனது INSEE Ecocycleஆக தனது வர்த்தக நாமத்தை மாற்றிக்கொண்டது. இலங்கையில் கழிவு மேலாண்மை துறையில் முன்னோடியான Insee Ecocycle, 400 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் முதன்மை தீர்வு வழங்குநராக உள்ளதுடன், கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக 500,000 மெட்ரிக் தொன் இற்கும் மேலான தொழிற்றுறை கழிவுகளை அகற்றியுள்ளது. இந்தச் செயற்பாடுகள் புத்தளத்தில் அமைந்துள்ள நிறுவனத்தின் பிரதான சீமெந்து தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
INSEE Ecocycle அங்குரார்ப்பணத்தின் போது கருத்து தெரிவித்த INSEE Ecocycleஇன் பொது முகாமையாளர் சன்ஜீவ சூளக்குமார, “முன்னணி சுற்றுச்சூழல் முறைமையின் அபிவிருத்தியில் Siam City சீமெந்து குழுமத்தின் உறுதியூடாக INSEE Ecocycle பயனடைகிறது” என்றார்.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago