Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயர் தரம் வாய்ந்த மற்றும் புத்தாக்கமான தளபாடங்கள் என்பது இல்லங்களுக்கும் வியாபார ஸ்தாபனங்களுக்கும் வாழ்நாள் முழுவதுக்குமான சிறந்த முதலீடாக அமைந்துள்ளது. இலங்கையின் தளபாடத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், Ashley Furniture HomeStore தனது முதலாவது காட்சியறையை 10,000 சதுர அடிப் பரப்பில் நிறுவியுள்ளது. இந்த காட்சியறையின் உரிமையையும், செயற்படுத்தும் அனுமதியையும் D'Décor வழங்கியுள்ளது.
கொழும்பு 5 இல் அமைந்துள்ள இந்த காட்சியறைக்கு 'Heritage House' என பெயரிடப்பட்டுள்ளதுடன், இதில் தினசரி வாழ்க்கைக்கு பொருத்தமான வீட்டுத் தளபாடங்கள் தெரிவுகள் உள்ளடங்கியுள்ளன. D'Décor இன் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், 'இந்த காட்சியறையை நிறுவி சில மணித்தியாலங்களினுள் எமக்கு சிறந்த வரவேற்பு கிடைத்தது. 0
இலங்கையர்களுக்கு சேவைகளை வழங்க எமக்கு வாய்ப்புக் கிடைத்ததையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். முதல் தர தளபாடங்கள் விற்பனையகம் எனும் வகையில் அவர்களின் நம்பிக்கையையும் தெரிவாகவும் திகழ நாம் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
'Ashley Furniture HomeStore மூலமாக பெருமளவு வீட்டுத் தளபாடத் தெரிவுகள் மற்றும் துறைசார் முன்னணி பெறுமதிகள் போன்றன வழங்கப்படுவதுடன், இவற்றின் மூலமாக பெருமளவு சேமிப்புகளையும், அதிகளவு சௌகர்யங்களையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். Ashley Furniture HomeStore என்பது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள ஒரு வர்த்தக நாமமாகும். இந்த நம்பிக்கையின் காரணமாக, உலகின் முதல் தர விற்பனை வர்த்தக நாமமாக இதை தெரிவு செய்துள்ளது. இந்த கலாசாரத்தை கொழும்பிலும் எமது முதலாவது HomeStore இனூடாக வழங்க தீர்மானித்துள்ளோம். எதிர்காலத்தில் மேலும் பல புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம்' என்றார்.
1945 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட அமெரிக்க தளபாட வர்த்தக நாமமாக Ashley அமைந்துள்ளது. 70 ஆண்டுகளுக்கு மேலான புத்தாக்கம் மற்றும் அனுபவத்தையும் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளது. துறையின் பரந்தளவு தயாரிப்புகளை தனது விற்பனை பங்காளர்கள் ஊடாக 123 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. உலகம் முழுவதும் 575 Ashley தளபாட விற்பனை நிலையங்கள் காணப்படுவதுடன், இவற்றில் பிந்திய உள்ளடக்கமாக கொழும்பில் அமைந்துள்ள காட்சியறை காணப்படுகிறது.
உயர் தரம் வாய்ந்த தளபாடத் தயாரிப்புகள் உற்பத்தியில் துறைசார் முன்னோடியாக Ashley திகழ்வதுடன், மாபெரும் 'உலகத் தரம் வாய்ந்த தளபாட உற்பத்தியாளர்' எனும் நாமத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அத்துடன், வட அமெரிக்காவின் முதல் தர வீட்டுத்தளபாட நாமமாகவும் திகழ்கிறது.
மேலும், Crestview தெரிவுகளுக்கான ஏக அங்கீகாரம் பெற்ற விற்பனையாளராகவும் Ashley கைச்சாத்திட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலான புத்தாக்க அலங்காரம், வர்ணங்கள் மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவற்றின் மூலமாக அமைந்த Crestview தெரிவுகள், இல்லங்களை அலங்கரித்துக் கொள்ள மிகவும் பொருத்தமான தெரிவுகளாக அமைந்துள்ளன. மேலும், அலங்கார ஒளியமைப்புகள், சாதனங்கள் மற்றும் தளபாடங்கள் மற்றும் சுவர் அலங்காரங்கள் ஆகியவற்றிலும் தனது விஸ்தரிப்பை மேற்கொண்டுள்ளது, இவற்றை நவீன 2015 Home Décor தெரிவுகளில் காண முடியும்.
இலங்கையின் தளபாடத் துறை என்பது, மர அடிப்படையிலான உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்டதாகும், இது பெருமளவில் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. உள்நாட்டில் அதிகரித்து வரும் நுகர்வோரின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், மேலைத்தேய கலாசார காட்சிப்பொருட்களையும், சர்வதேச வர்த்தக நாமங்களையும் பயன்படுத்தி வருகின்றன.
இந்த காட்சியறையில் படுக்கையறை, உணவருந்தும் upholstery, motion upholstery, லெதர், நிகழ்வுகளுக்கான மேசைகள், களிப்பூட்டும் நிலையங்கள், வீட்டு அலுவலகம், இளைஞர் படுக்கையறை, recliners, மெத்தைகள், விளக்குகள், accent தலையணைகள், throws, area rugs மற்றும் சாதனங்கள் போன்றன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
5 hours ago
8 hours ago
9 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago
19 Sep 2025