2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இலங்கையில் அக்சியாடா தொடர்ந்து இயங்கும்

Gavitha   / 2016 செப்டெம்பர் 21 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எழுநூறு மில்லியன் ‌அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வெளிநாட்டு உரிமையாண்மைகளை விற்பனை செய்வதற்கு பொருத்தமான கொள்வனவாளர்களைத் தாம் எதிர்பார்த்துள்ளதாக கடந்தவாரம் வெளியாகிய அறிக்கைக்கும் இலங்கையில் தாம் முன்னெடுத்து வரும் வியாபார செயற்பாடுகளுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என அக்சியாடா நிறுவனம் அறிவித்துள்ளது.  

இலங்கையில் அக்சியாடா முன்னெடுத்து வரும் டயலொக் தொலைத்தொடர்பாடல் சேவைகளின் உரிமை தொடர்பில் விரைவில் மாற்றம் ஏதும் ஏற்படக்கூடும் என பரவலான தகவல் பரவியதைத் தொடர்ந்து இத்தெளிவுபடுத்தும் அறிவிப்பை அக்சியாடா நிறுவனம் அறிவித்துள்ளது.  
1995ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும், இதுவரையில் நாட்டில்

மேற்கொண்டுள்ள அதிகளவான வெளிநாட்டு முதலீடுகளைத் தம்வசம் கொண்டுள்ளதாகவும் இதன் பெறுமதி 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட அதிகம் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.  
இலங்கையில் காணப்படும் சிறந்த ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக டயலொக் அக்சியாடா திகழ்வதுடன், அலைபேசி சேவைகளை வழங்குவதில் நாட்டின் முன்னணி சேவை வழங்குநராகவும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X