2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் அறிமுகமானது GOYO

Gavitha   / 2017 ஜனவரி 23 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முருகவேல் சண்முகன்  

இலங்கையில், நேற்று முன்தினம் GOYO அறிமுகமான நிலையில், இதனையொட்டி, ஆர்கேட் சுதந்திர சதுக்கத்தில், அன்று மாலை முதல் பல உடற்றகுதிப் போட்டிகள், சவால்கள் இடம்பெற்றிருந்தன.  

மேற்கூறப்பட்ட நிகழ்வில், ஸும்பா நடனங்கள் உள்ளிட்ட உடற்றகுதியை மேம்படுத்தும் பல்வேறு வகையான போட்டிகள் இடம்பெற்றதுடன், அவற்றில் வெற்றியீட்டியவர்களுக்கு, GOYOஇன் பங்காளர்களிடமிருந்து வெகுமதிகளும் வழங்கப்பட்டிருந்தன. இவை தவிர, குறித்த நிகழ்வில், யுரேனி போன்ற பிரபலங்களை சந்திக்கக் கூடியதாகவிருந்ததுடன், கொழும்பிலுள்ள உடற்றகுதி நிபுணர்களையும் சந்தித்து, இலவச ஆலோசனைகளையும் பெறக்கூடியதாகவிருந்தது.  

மேற்கூறப்பட்ட நிகழ்வில், GOYOஇன் செயலி, அன்ட்ரொயிட், ஐ.ஓ.எஸ் இயங்குதளங்களில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், GOYOஇன் கையில் அணியும் சாதனமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   

GOYOஇன் கையில் அணியும் சாதனத்தின் விலை வெறும் 5,700 ரூபாய் மட்டுமே என்பதோடு, இதன் மூலம் கலோரிகளை கண்காணிக்க முடியும் என்பதோடு, எவ்வளவு அடிகளை நடக்கின்றீர்கள் என்பதை கணக்கிட முடிவதோடு, எவ்வளவு தூரம் நடக்கின்றீர்கள் என்பதையும் கணக்கிடமுடியும். இவை தவிர, இதன் மூலம் உங்களின் நித்திரை முறைகளை கண்காணிக்க முடியும் என்பதோடு, இதயத் துடிப்பையும் கண்காணிக்க முடியும்.  

GOYOஇன் செயலியில் பல சவால்கள் காணப்படுவதுடன், அவற்றினை பூர்த்தி செய்யும் பட்சத்தில், GOYOஇன் பங்காளர்களிடமிருந்து வெகுமதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறான நடைமுறை, எந்தவொரு உடற்றகுதி செயலியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, இச்செயலில், உடற்றகுதி சவால்களைப் பூர்த்தி செய்வதற்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, தரவரிசை காணப்படுகிறது. இதன் மூலம், நீங்கள் உங்கள் உடற்றகுதியை மேம்படுத்துவதற்குரி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X