2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இலங்கை‌யில் புதிய Ford Range

Gavitha   / 2016 ஒக்டோபர் 10 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

Ford மோட்டர் கம்பனி மற்றும் அதன் உள்நாட்டு விநியோக பங்காளரான  ஃபியுச்சர் ஒடோமொபைல்ஸ் ஆகியன இணைந்து, புதிய Ranger ரக வாகனத்தை இலங்கையில் அறிமுகம் செய்திருந்தன. இப் புதிய Ranger வாகனத்தை நாடு முழுவதிலுமுள்ள Ford காட்சியறைகளில் பார்வையிட முடியும்.  

புதிய Ford Ranger இல் பாதுகாப்பு, இயங்குதிறன் மற்றும் உயர் தொழில்நுட்பம் போன்ற வௌ;வேறு அம்சங்கள் பயணிகளுக்கும் சாரதிக்கும் சௌகரியத்தை வழங்கும் வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.  

இந்த Ford Ranger தொடர்பில், Ford மோட்டர் கம்பனியின் ஆசிய பசுபிக் வளர்ந்து வரும் சந்தைகளுக்கான முகாமைத்துவப் பணிப்பாளர் டேவிட் வெஸ்டர்மன் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் காணப்படும் இதர pickup களுடன் ஒப்பிடுகையில், புதிய Ford Ranger என்பது “Built Ford Tough” எனும் எமது பாரம்பரிய முறைக்கமைய அதிகளவு வலிமையுடனும், அதிக எடையை ஏற்றக்கூடிய திறனையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய பாதுகாப்பு மற்றும் ஸ்மார்ட் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட ஒரே pickup ஆகவும் திகழ்கிறது” என்றார்.  

புதிய Ford Ranger இன் எரிபொருள் சிக்கனத்தன்மையை 12 சதவீதத்தால் மேம்படுத்தும் வகையில், புதிய தலைமுறை 3.2-litre Duratorq five-cylinder மற்றும் 2.2-2.2-litre Duratorq four-cylinder TDCi என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.   இந்தப் புதிய Ford Ranger தொடர்பில், ஃபியுச்சர் ஒடோமொபைல்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி சமத் தென்னகோன் கருத்துத்தெரிவிக்கையில், ‘இலங்கையின் சாரதிகள் ட்ரக் ஒன்றின் திறனையும், பயணிகள் வாகனமொன்றின் சௌகரியத்தையும் எதிர்பார்ப்பதை நாம் அறிவோம். இதனை கவனத்தில் கொண்டு, புதிய Ford Ranger அவர்களின் அலுவலக பணிகளுக்காகவும், குடும்பத்தாருடனான பயணங்களின் போதும் மிகவும் இனியமையான பயண அனுபவங்களை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது’ என்றார்.  

நீரில் 800 mm ஆழம் வரையிலும், நிலத்தில், 230 mm உயரம் வரையிலும் இயங்கும் புதிய Ranger மிகவும் மோசமான நிலப்பரப்புகளிலும், மேடு பள்ளங்கள் நிறைந்த பகுதிகளலும் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சஸ்பென்ஷன், மேலதிக சௌகரியத்தையும், சிறந்த கையாளலையும் வழங்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.

சாரதிகளுக்கு சிறந்த செலுத்துகை அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், electric pow  er-assisted steering (EPAS) system ஐக் கொண்டுள்ளது, இது தரித்தல் மற்றும் நெரிசலில் பயணித்தல் போன்று அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்தல் போன்ற நிலைகளில் சாரதிகளுக்கு இலகுவாக கையாளக்கூடிய அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.  புதிய Ford Ranger அதிகளவு ஆறு வேக ஓடோமெடிக் அல்லது மெனுவல் கியர் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. அதிகளவு பாரங்களைக் கொண்டு செல்வதற்கு உதவும் வகையில், Ford இனால், புதிய தொழில்நுட்பங்கள் பின்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X