2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் முதலீடு செய்வதற்கு துருக்கி நிறுவனங்கள் ஆர்வம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 17 , பி.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பொருளாதார நிலைமையானது தற்போது சிறப்பாகக் காணப்படுவதால் பல துருக்கிய நிறுவனங்கள் இலங்கையில் நிர்மாணம், சுற்றுலா போன்ற பல துறைகளில் முதலீடு செய்வதற்கு ஆர்வத்துடன் இருப்பதாக இலங்கைக்கான துருக்கிய உயர்ஸ்தானிகர் டுனா ஓஸ்குஹடார் தெரிவித்தார்.   

துருக்கி இலங்கை வர்த்தக கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், துருக்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவானது, கடந்த சில வருடங்களாக நிலையாக முன்னோக்கிச் செல்கின்ற தன்மையைக் காணக்கூடியதாகவுள்ளது. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நோக்கும் போது 2015இல் முக்கால்வாசி ஆண்டுகாலப் பகுதி வரைக்கும்

இலங்கை, துருக்கிக்கு 115 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ஏற்றுமதியானது தேயிலைக்கு ஆடைகள் என்ற விதத்தில் இடம்பெற்றுள்ளது. அதேநேரத்தில் துருக்கி, இலங்கைக்கு 51 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலானப் பொருட்களை ஏற்றுமதிசெய்துள்ளது.   

அவற்றில் மின் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களும் உள்ளடங்கியுள்ளன. இந்த நிலைமைகளை அடிப்படையாக வைத்து நோக்கும்போது இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவானது மேலும், முன்னேறுவதற்கான நிலைமை, சந்தர்ப்பம் காணப்படுகின்றன. ஆகவே, இந்த இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவதற்கான, உறுதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கின்றோம். துருக்கி மிகவும் நிலைபேறான மற்றும் முதலீடுகள் செய்வதற்கு, பாதுகாப்பான நாடாகவும் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.   

துருக்கியில் ஒரு கம்பனியை, வணிக நிறுவனமொன்றை ஆரம்பிப்பதற்கான நடைமுறைகள் சட்டதிட்டங்கள் மிகவும் இலகுவாக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான முதலீட்டுச் செலவுகளும் குறைவாகவே காணப்படுகின்றன. மேலும், கிழக்குத் துருக்கியில் முதலீடுகளை மேற்கொள்பவர்களுக்கு ஐந்து தொடக்கம் 10 வருட காலங்கள் வரையான வரி கிடைக்கும். துருக்கி அரசாங்கமானது வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதற்கான சகல வழிகளையும் மேற்கொண்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .