2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இலங்கையரின் சருமத்துக்கு பொருத்தமான BB+ கிறீம்கள் அறிமுகம்

Administrator   / 2016 நவம்பர் 02 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பியூட்டி பாம்ஸ் என அழைக்கப்படும் BB+ கிறீம்கள், பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் அழகிய foundation make upக்கான மாற்றீட்டுத்தெரிவாக அமைந்துள்ளன. இதுவரை காலமும் இலங்கையர்களின் சருமத்துக்கு பொருத்தமான BB+ கிறீம் வகையொன்று காணப்படாத நிலையில், இந்தியர்களின் சருமத்துக்கு பொருத்தமான தயாரிப்புகள், இலங்கையிலும் பயன்படுத்தப்பட்டிருந்தன. ஆனாலும், BB+ இனால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Gold BB+ கிறீம், இலங்கையர்களின் சருமத்துக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  

4rever Gold BB+ கிறீம், அண்மையில் நடைபெற்ற “Derana 4rever Miss Sri Lanka for Miss Earth 2016” அழகுராணி தெரிவின் மாபெரும் இறுதிப்போட்டியின் போது, அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வுக்கு 4rever அனுசரணை வழங்கியிருந்தது. அழகை மேம்படுத்தும் வகையிலும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும், 100 சதவீதம் இயற்கையான மூலிகை மூலப்பொருட்களைக்கொண்டு, அழகியல் சாதனப்பொருட்களை உற்பத்தி செய்து வரும் 4rever, சந்தையில் தனக்கென தனியிடத்தைக் கொண்டுள்ளது. 2006ஆம் ஆண்டு, புகழ்பெற்ற கூந்தல் மற்றும் அழகியல் கலை நிபுணரான திருமதி. சாந்தனி பண்டாரவினால் ஸ்தாபிக்கப்பட்ட இந்நிறுவனம், மூலிகை மூலப்பொருட்களையும் பல நூற்றாண்டு காலமாக நம்பப்படும் பாரம்பரிய அறிவையும் கொண்டு, வெவ்வேறு ஆய்வு மற்றும் அபிவிருத்தி பரிசோதனைகளுக்கு உட்படுத்திய தயாரிப்புகளை உற்பத்தி செய்த வண்ணமுள்ளது.   

சிறந்த தரம் வாய்ந்த மூலப்பொருட்கள் என்பதில் நிறுவனம் கவனம் செலுத்தி வருவதுடன், இதற்காக தனது இயற்கை மூலப்பொருட்களை உள்நாட்டில், சான்றளிக்கப்பட்ட மூலிகைத்தோட்டங்கள் மற்றும் வளர்ப்பாளர்களிடமிருந்து மாத்திரம் கொள்வனவு செய்கிறது. இலங்கையின் மாபெரும் மூலிகை அடிப்படையிலான அழகியல் பொருட்கள் உற்பத்தியாளர் எனும் கீர்த்தி நாமத்தைக்கொண்டுள்ள இந்நிறுவனம், 70க்கும் அதிகமான தனது சொந்தத் தயாரிப்புத்தெரிவுகளை கொண்டுள்ளது. மேலும், சர்வதேச வர்த்தக நாம உரிமையாளர்களுக்கு OEM சான்றையும் வழங்கி வருகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X