2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு SLT-MOBITEL அனுசரணை

S.Sekar   / 2022 மே 02 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, இலங்கை குத்துச் சண்டை சம்மேளனத்துக்கு பிரதான அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள வருடாந்த பிரதான நிகழ்வுகளுக்கான அனுசரணையை SLT-MOBITEL வழங்கும். அண்மையில் இடம்பெற்ற Layton கிண்ண குத்துச் சண்டை போட்டிகள் 2022 இன் போது இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது.

பிரதான அனுசரணை ஒரு வருட காலத்துக்கான ஒப்பந்தத்தைக் கொண்டிருப்பதுடன், குத்துச் சண்டை சம்மேளனத்தின் வருடாந்த நாட்காட்டியில் மூன்று பிரதான நிகழ்வுகளுக்கு SLT-MOBITEL பிரதான அனுசரணையை வழங்கும். ஆண் மற்றும் பெண் குத்துச் சண்டை அணிகளுக்கு முழு ஆதரவை வழங்க SLT-MOBITEL முன்வந்துள்ளதுடன், போதியளவு விருத்தி மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுக்கும். இதனூடாக, சகல விளையாட்டு வீரர்களுக்கும் உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும்.

ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “நிறுவனம் எனும் வகையில், நாட்டின் பிரதான விளையாட்டுகளுக்கு ஆதரவளித்து வருகின்றோம். கடந்த காலங்களில் குத்துச் சண்டைப் போட்டிகளில் இலங்கை குத்துச் சண்டை சம்மேளனம் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது. இந்த விளையாட்டு பதிவு செய்துள்ள முன்னேற்றத்துடன், எமது ஆதரவும் கிடைப்பதனூடாக, இந்த சம்மேளனத்துக்கு மேலும் வளர்ச்சியை பதிவு செய்து, இலங்கைக்கு எதிர்காலத்தில் மேலும் பெருமையை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

SLT-MOBITEL அனுசரணையின் கீழ் இலங்கை குத்துச் சண்டை சம்மேளனத்தினால், இலங்கை குத்துச் சண்டை தேசிய சம்பியன்ஷிப், Layton கிண்ணம் மற்றும் Clifford கிண்ணம் ஆகியவற்றை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும். இலங்கையின் குத்துச் சண்டை நாட்காட்டியில் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக Layton கிண்ணம் 2022 அமைந்திருந்தது. இதில் போட்டியிட்ட வீரர்கள், 2022 ஜுன் மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்பதற்கு பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டனர்.

இலங்கை குத்துச் சண்டை சம்மேளனத்தின் தலைவர் டியன் கோமஸ் குறிப்பிடுகையில், “இலங்கையில் குத்துச் சண்டை போட்டிகளை ஊக்குவிப்பதில் SLT-MOBITEL முழு ஆதரவை வழங்குவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். சம்மேளனத்தின் நிபுணத்துவமான வழிமுறை மற்றும் கடின உழைப்பு ஆகியன தொடர்ச்சியாக முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதுடன், விளையாட்டு உயர்ந்த ஸ்தானத்துக்கு செல்வதை உறுதி செய்கின்றது. எமது இளைஞர்கள் மத்தியில் குத்துச் சண்டைப் போட்டிகள் தொடர்பில் பிரபல்யத்தை ஏற்படுத்தி, நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்துவதாக SLT-MOBITEL இன் அனுசரணை அமைந்திருக்கும் என்பதில் இலங்கை குத்துச் சண்டை சம்மேளனம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், இந்தப் பங்காண்மையை மேலும் முன்னேற்றுவது தொடர்பில் நாம் கவனம் செலுத்துகின்றோம்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .