Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 மே 15 , மு.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பிஎல்சி, மருத்துவத்துறையில், சர்வதேச ரீதியில் அங்கிகரிக்கப்பட்ட ஒரு முன்னணி நிறுவனமாகும். அது, இலங்கை குருதியியல் கல்லூரியுடனான (The Sri Lanka College of Haematologists - SLCH) தொடர் மருத்துவக் கல்வி (CME) அமர்வை முன்னெடுத்து வருகிறது.
இந்த அமர்வு, லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் கேட்போர் கூடத்தில், குருதியியல் சார்ந்த இரத்த அணு எண்ணியல் பிரிவில், கடந்த நவம்பர் 25ஆம் திகதி நடைபெற்றது. கனடாவைச் சேர்ந்த விரிவுரையாளரான வன்கூவர், பிரதம வைத்தியசாலையின் குருதியியல் நோய் சிகிச்சை பேராசிரியர் பாகுல் டலால் உட்பட, உள்நாட்டு குருதியியல் வைத்திய நிபுணர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன் போது, முன்னைய, பலதரப்பட்ட நிகழ்வுகளில் இடம்பெற்ற தகவல்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டு, பயனுள்ள விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
இலங்கை FCM துறையில் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. நாட்டின் தனியார் துறை ஆய்வுகூடம் ஒன்றான LHD யில் மாத்திரமே தற்போது இந்த வசதி கொண்ட ஆய்வுகூடமாகச் செயற்பட்டு வருகின்றது.
இதனால், நாடு தழுவிய ரீதியில் தீவிர இரத்தப் புற்றுநோயாளிகள் (Leukaemia), வடிநீரகப்புற்று (lymphoma) மற்றும் அது சார்ந்த நோய்களுக்குச் சிகிச்சை பெற இந்த ஆய்வுகூடத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இவ்வாறான நிகழ்வுகளின் மூலம் பகிரப்படும் அறிவால் நோயாளிகளுக்குப் பெரிதும் நன்மை கிடைக்கிறது.
லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் கோப்பரேஷன், லங்கா ஹொஸ்பிட்டல்ஸ், டயக்னொஸ்டிக்ஸுடன் இணைந்து இவ்வாறான மேலும் பல நிகழ்வுகளை அரச - தனியார்துறை ஒத்துழைப்புடன் நடத்த எதிர்பார்க்கிறது. இதன்மூலம், சுகாதாரத்துறை வளர்ச்சியின் பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய ஒத்துழைப்புகளின் பலனை எதிர்காலத்திலேயே உணர முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
25 minute ago
26 minute ago