Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வங்கி கிளை வலையமைப்பு, 2018 ஏப்ரல் 16 ஆம் திகதி திங்கட்கிழமை அதன் வாடிக்கையாளர் எல்லோருடனும் மரபுரீதியான புத்தாண்டுக் கொடுக்கல்வாங்கலை மேற்கொண்டு, இலங்கை வங்கி சிங்கள, தமிழ் புத்தாண்டின் உண்மையான உணர்வை நாடு பூராகவும் கொண்டாடியது.
இப்பாரம்பரிய கொண்டாட்டத்தை கொண்டாடுவதற்கு இலங்கையில் மிகவும் நம்பகமான வங்கியாகத் தங்களது வாடிக்கையாளர்கள் எல்லோரையும் அவர்களது குடும்பங்களுடன் சமுகமளிக்கும்படி அழைப்புவிடப்பட்டி ருந்ததுடன் அவர்களுக்காக விஷேசமாக மரபுரீதியான சிற்றுண்டிகளுடன் புதுவருட மேசை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் வங்கியில் ரண் கெகுளு கணக்கு வைத்திருப்போருக்கு பரிசுத்திட்டமொன்றையும் வங்கி வழங்கியது.
இம் மரபுரீதியான நிகழ்வின் பிரதான வைபவம், இலங்கை வங்கி பொது முகாமையாளரும் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தருமான செனரத் பண்டார, விற்பனைகள் மற்றும் நெறிப்படுத்தல் முகாமைத்துவப் பிரதிப்பொது முகாமையாளர் அமரசிங்ஹ, கிளை வங்கியியல் பிரதிப்பொது முகாமையாளர் தஸநாயக்க, சந்தைப்படுத்தல் பிரதான உத்தியோகத்தர் கலாநிதி இந்துனில் லியனகே, சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் பிரியால் சில்வா, மேல்மாகாண வடக்கு உதவிப்பொது முகாமையாளர் சம்பத் பெரேரா மற்றும் இலங்கை வங்கி நகரக்கிளை பிரதான முகாமையாளர் திருமதி பீ. வன்னிஆரச்சி ஆகியோரின் பங்கேற்புடன் இலங்கை வங்கி நகரக்கிளையில் (இலங்கை வங்கியின் 1ஆவது கிளை) நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago