2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இலங்கை வங்கியின் ‘நனஜய’ புலமைப்பரிசில் அறிமுகம்

Editorial   / 2018 மே 23 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்​கையிலுள்ள, உயர்க்கல்வியைத் தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, இலங்கை வங்கி, மீண்டும் புலமைப்பரிசில் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கல்விப்பொதுத் தராதர உயர்தரத்தில், உயர் பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு, “இலங்கை வங்கியின் நனஜய புலமைப்பரிசில்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையானது, உயர்க்கல்வியை தேடும் மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமே. இது, அவர்களது கல்வித் தேவைக்கு, நிதி ரீதியான உதவியை வழங்குவதோடு, மாதாந்தம் செலவைக் கட்டுப்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.   

கல்வி என்பது, நாட்டின் வளர்ச்சிக்கு சாத்தியமானதாகவும் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதும் ஆகும். இவ்வாறு ஒவ்வொரு முக்கியமான விடயங்களைக் கருத்தில் கொண்டே, “நனஜய” புலமைப்பரிசில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், 2016ஆம் ஆண்டு மற்றும் 2017ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில், உயர்மதிப்பெண்களைப் பெற்ற 800 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக, முறையே, 16.2 மில்லியன் ரூபாய் மற்றும் 16.3 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   

இலங்கை வங்கியின் 18 பிளஸ் என்ற, நாட்டின் பிரீமியர் இளைஞர் சேமிப்பு கணக்குடன் இணைந்து, மகாபொல புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம், உயர்க்கல்வியை ஊக்குவிப்பதற்கு, அரசாங்கம் வழங்கியதை ஒரு தளமாகக் கொண்டே, இந்த புலமைப்பரிசிலும் வழங்கப்படுகின்றது. இதன்மூலம், மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கான உயர்க்கல்விக்கு ஏற்படும் செலவை, மாணவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும்.   

மெரிட் புலமைப்பரிசில்களுக்கு, கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம், கலை, தொழில்நுட்பம், உயிரி அமைப்பு தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அதேபோன்ற பிரிவுகளைச் சேர்ந்த, உயர் பெறுபேறுகளைப் பெறும் மாணவர்கள் ​தகுதியானவர்களாக தெரிவு செய்யப்படுவர். அவர்களுக்கு, 48,000 ரூபாய் புலமைப்பரிசில் வழங்கப்படும் என்ப​தோடு, மெரிட் அல்லாத புலமைப்பரிசிலுக்கு, 36,000 ரூபாய் வழங்கப்படும்.   

இந்தத் தொகை, 18+SmartGen சேமிப்பு கணக்கில், மாதாந்தம் வரவுவைக்கப்படும். கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் ​டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரை, 18 பிளஸ் கணக்கில், 5,000 ரூபாயை பேணி வந்த, உயர்ந்த இசட் புள்ளி​களை பெற்றோருக்கும் மாவட்ட அடிப்படையில், இந்த புலமைப்பரிசிலுக்குள் உள்வாங்கப்படுவர்.

அதேபோன்று, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரை, குறித்த கணக்கில் 10,000 ரூபாயை பேணி வந்த, உயர்ந்த இசட் புள்ளிகளை பெற்றோரும் இதற்குள் உள்வாங்கப்படுவர். இதற்கான விண்ணப்பப்படிவங்களை, www.boc.lk என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

அதேபோன்று. 2018ஆம் ஆண்டு பரீட்சை எழுதவுள்ள உயர்தர மாணவர்கள், நன ஜய புலமைப்பரிசில் உள்வாங்கப்படுவதற்கு, 18 பிளஸ் கணக்கில், ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகத முதல், 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை, 10,000 ரூபாயை பேணி வருதல் வேண்டும்.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .