2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கு அனுப்பும் பணத்தை கவரும் முயற்சியில் DFCC வங்கி

S.Sekar   / 2022 ஜூலை 29 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

DFCC வங்கி, வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்தை கவர்வதற்கான ஒரு விசேட சந்தைப்படுத்தல் முன்னெடுப்பு மற்றும் திட்டத்தை அண்மையில் தொடங்கியுள்ளது. இந்த சவாலான காலகட்டத்தில் தேசத்திற்கு ஆதரவளிக்க விரும்புவதால், DFCC வங்கியானது DFCC வங்கிக் கணக்கில் பெறப்படும் அனைத்து தனிப்பட்ட வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் பணப்பரிமாற்றங்களுக்கும் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு ரூ. 1/- ஐ கூடுதலாக வழங்குகிறது. இந்த விசேட ஊக்கத்தொகையானது இலங்கை மத்திய வங்கியானது வெளிநாட்டில் தொழில் புரிவோர் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்காக தற்போது நடைமுறையில் உள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கு ரூ. 2/- என்ற திட்டத்திற்கு மேலதிகமாக வழங்கப்படுகின்றது. தற்போதைய சவால்களுக்கு மத்தியில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களில் தங்கியுள்ளவர்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்த கூடுதல் நன்மை உதவும் என வங்கி நம்புகிறது. இந்த ஊக்கத்தொகை பெறுநரின் விருப்பப்படி எந்த DFCC கணக்கிற்கும் செலுத்தப்படும். மேலும் இது அமெரிக்க டொலர் பணப்பரிமாற்றங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாது, அனைத்து முக்கிய வெளிநாட்டு நாணயங்களிலும் இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கும் பொருந்தும்.

புதிய திட்டம் தொடர்பில் DFCC வங்கியின் கடல்கடந்த வங்கிச்சேவை, பணம் அனுப்பல் மற்றும் நிறுவன வணிக மேம்பாட்டுத் துறையின் சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரியான அன்டன் ஆறுமுகம் கருத்து வெளியிடுகையில், “இலங்கைக்கு மிகவும் முக்கியமான இந்த தருணத்தில், பொறுப்புணர்வு மிக்க உரிமம் பெற்ற வணிக வங்கி என்ற வகையில், முறையான வங்கி கட்டமைப்பின் மூலம் நாட்டிற்குள் வரும் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களை அதிகரிக்கச் செய்வதே எமது பிரதான நோக்கமாக உள்ளது. இந்த வழிமுறையானது இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கு பாதுகாப்பான, மிகவும் வெளிப்படையான மற்றும் ஒரேயொரு சட்டபூர்வமான வழியாகும். உண்மையில், அவ்வாறு செய்வதன் மூலம், பணம் அனுப்புபவர்கள் மற்றும் பயனாளிகள் வரி மற்றும் நிதியியல் நன்மைகள் போன்ற பல வரப்பிரசாதங்களை அனுபவிக்க முடியும். வங்கி கட்டமைப்பின் மூலம் பணத்தை அனுப்பும் வெளிநாட்டவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை மேம்படுத்தும் வழிமுறைகளை இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க நாங்கள் ஒழுங்குமுறை அமைப்புக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்,” என்று குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .