Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூலை 11 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
Peugeot இன் பல விருதுகள் பெற்றதும் உலகளாவிய ரீதியில் வாகன ஆர்வலர்களால் ‘Space Wagon’ என அழைக்கப்படுகின்ற, SUV சமீபத்தில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரான்ஸ் உற்பத்தியாளர்களின் சிறந்த உற்பத்தியான இந்த ஏழு இருக்கை வாகனமானது, இலங்கையில் Peugeotக்கான பிரத்தியேக விற்பனையாளரான Carmart Limited இனாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அறிமுகப்படுத்தலானது இல 424, யூனியன் பிளேஸ், கொழும்பு - 4 எனும் முகவரியில் அமைந்துள்ள Carmart இன் விசாலமான காட்சியறையிலேயே நடைபெற்றது.
கடந்த தசாப்தங்களில் இந்த SUV ஆனது அதன் உட்புற நேர்த்தியானது கரடுமுரடான வெளிப்புற கட்டமைப்புடன் இணைந்து காணப்படுவதாலேயே பல கார் உரிமையாளர்களின் விருப்பத்தேர்வாக இந்த SUV புகழ்பெற்றுள்ளது. இலங்கையின் மாறுபடும் காலநிலை மற்றும் வெவ்வேறுபட்ட வீதி நிலைமைகளுக்கு மிகப்பொருத்தமானதாக SUV காணப்படுகின்றது.
Peugeot இன் பிரான்ஸ் தேசத்தில் அமைந்துள்ள ஸ்டேட் ஒப்த ஆர்ட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் இந்த ஐரோப்பிய வாகனமானது, 2018ஆம் ஆண்டில் What Car - Best Large SUV போன்ற பல சர்வதேச அங்கிகாரங்களைப் பெற்றுள்ளது.
ஐக்கிய இராஜ்ஜியத்தில் நீண்ட நாட்களாக நடாத்தப்படும் மாதாந்த ஆட்டோமொபைல் சஞ்சிகை மற்றும் இணையத்தளமான ‘What Car?’, கார் சந்தையின் ஒவ்வொரு துறைகளிலும் உள்ள சிறந்த கார்களைத் தெரிவுசெய்வது மாத்திரமன்றி, ஒவ்வொரு தை மாதத்தின் போதும் ‘வருடத்துக்கான கார்’ எனும் சிறந்த காரைத் தேர்ந்தெடுக்கின்றது.
இந்த வாகனத்தின் அப்பழுக்கற்ற நவீன வடிவமைப்பு மற்றும் நடைமுறை அம்சங்களானவை, வாகனத்தை ஒரு பெரிய குடும்பத்துக்கு ஏற்ற வாகனமாக மாற்றும் அதேவேளையில், தனது மென்மைத்தன்மையை தக்க வைத்தல் என்பனவே இவ்விருதைப் பெற்றுக்கொள்ள வழிவகுத்த முக்கிய சிறப்பியல்புகளாகும்.
இந்த வாகனமானது ‘i-Cockpit’ எனப்படும் உட்புற அமைப்பைக்கொண்டுள்ளதுடன், இடவசதிகளுக்கான புதிய தலைமுறைகளின் கோரிக்கைகளை SUV சிறந்த முறையில் பூர்த்தி செய்கின்றது. இவ்வாகனம் சாதாரணமாக ஏழு இருக்கைகளைக் கொண்டுள்ளதுடன் முதல் இரண்டு வரிகைளிலும் தாராளமான அளவில் பெரியவர்களுக்கான இடவசதி காணப்படும் அதேவேளையில், மூன்றாவது வரிசை இருக்கைகள் சிறுவர்களுக்குப் பொருத்தமானதாகக் காணப்படுகின்றது.
இந்த இருக்கைகள் மடிக்கப்படும் சந்தர்ப்பத்தில், நீண்ட நாள் பயணங்களுக்குத் தேவையான களஞ்சியப்படுத்தலுக்குப் பொருத்தமான இடவசதியைக் கொண்டுள்ளது.
இலங்கையில் வாகனங்களுக்குக் காணப்படும் வரிவிதிப்புகளுக்கு மத்தியிலும் இந்த வாகனத்தை மிகவும் கவர்ச்சிகரமான நம்ப முடியாத அறிமுகப்படுத்தல் விலையான 9.9 மில்லியனுக்குப் பெறக்கூடியதாக காணப்படுகின்றது.
துல்லியமான கையாளுதல், எளிதான கட்டுப்பாட்டு இயக்கி, முன் மற்றும் பின் பார்க்கிங் சென்ஸஸ் என்பவற்றை மிக எளிதாக்கும் ரியர்-வியு கமெரா என்பனவும் இதனுள் உள்ளடங்குகின்றன.
i-Cockpit இல் காணப்படும் பல இயந்திர நுணுக்கப்பகுதிளானவை தனித்துவமானவைகளாகக் காணப்படுகின்றமை இதன் இன்னுமொரு சிறப்பம்சமாகும். இதனது ஸ்டியரிங் வீல், 8’ டச் ஸ்கிரீன் டாஸ்போஃர்ட், 12.3’ ஹை ரெசல்யூஷன் டிஜிடல் ஹெட்-அப் டிஸ்ப்ளே என்பன உள்ளடங்கலான இந்த i-Cockpit அதனது சிறந்த கிராபிக்ஸ் மற்றும் நேர்த்தியான அனிமேஷன்ஸ் என்பனவற்றின் மூலம் வாகன சாரதிகளை மிகவும் கவர்ந்திழுக்கின்றது.
இந்த PEUGEOT 5008 ஆனது சாதாரண SUV யை விட சிறந்ததாகக் காணப்படுகின்றது. மூன்று பொருத்தல்கள், தனிப்பட்ட, இரண்டாவது வரிசையில் மடிக்கக்கூடிய இருக்கைகள், நீளத்தில் சரிசெய்யக்கூடிய, அகற்றக்கூடிய, மூன்றாவது வரிசையில் மடிக்கக்கூடிய இருக்கைகள் மற்றும் மடிக்கக்கூடிய முன் இருக்கை(3.20m வரையிலான நீண்ட பாரத்தை தாங்கக்கூடிய) எனும் புதுமையான அம்சங்களுடன் இவ்வாகனமானது பிற வாகனங்களிலிருந்து தனித்துவத்துடன் காணப்படுகின்றது.
இந்த விலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய மற்றைய வாகனங்களில் காணப்படாத பல அம்சங்கள் Peugeot 5008 வழங்குகின்றது. 12 வருட கால துளை எதிர்ப்பு உத்தரவாதம் மற்றும் 4 வருட திட்டமிட்ட பராமரிப்பு காலண்டர் என்பனவற்றை முற்றிலும் இலவசமாக வழங்குவதன் மூலம் இந்தச் சலுகையை மேலும் Carmart களிப்பூட்டுகின்றது.
மேலதிக தகவல்கள் மற்றும் ஒரு பரிசோதனை ஓட்டத்தை உங்களுக்கு ஒதுக்கீடு செய்ய, 0114 400800 எனும் தொலைபேசியில் Carmart இனைத் தொடர்பு கொள்கவும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
20 May 2025