2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இலங்கையிடமிருந்து இறப்பர் கொள்வனவில் ஆர்வம் காட்டும் ஸ்லோவாகியா

Editorial   / 2018 மார்ச் 29 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முன்னணி கார் தயாரிப்பாளராக திகழ்கின்ற ஸ்லோவாகியா, தனது இறப்பர் வர்த்தக செயற்பாட்டை இலங்கையுடன் விரிவுப்படுத்தவுள்ளது என ஸ்லோவாகியா நிதி அமைச்சர் பீட்டர் கசிமீர் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விஷேட அழைப்பின் பேரில்,கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத் தலைமைக் காரியாலயத்தில் இன்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஸ்லோவாகியா நிதி அமைச்சர் பீட்டர் கசிமீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடந்து கருத்து தெரிவிக்கையில், “எங்கள் றப்பர் தொழிற்​துறையை விரிவுபடுத்த விரும்புகிறோம். எங்கள் தொழில்துறை ஏற்றுமதியில் 40 சதவீதம் வாகன ஏற்றுமதியாகும். KIA, Volkswagen, Jaguar Landrover, Audi, and PSA Peugeot Citroen போன்ற உலகளாவிய பிராண்டுகள் இப்போது Tier One OEMமட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.  எங்கள் வாகன உற்பத்தித் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது, கடந்த ஆண்டுகளாக நாங்கள் உலகின் முன்னணி கார் தயாரிப்பாளராக திகழ்கின்றோம். இதன் விளைவாக, நாங்கள் இப்போது எங்கள் தொழில்துறை விநியோக மூலங்களை வேறுபடுத்தி செயலாற்றி வருகின்கிறோம்.

உதாரணமாக, நமது றப்பர் கொள்வனவை விரிவுபடுத்துவதற்கும் விரும்புகிறோம். டயர் பொருட்கள் விநியோகம் எங்களுக்கு முக்கியமானது. இலங்கை றப்பர் துறையோடு விரிவுபடுத்துவதோடு, குறிப்பாக டயர்களையும் கவனத்தில் கொள்கிறோம்” என்றார். 

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில், “எமது றப்பர்,டயர்கள் மற்றும் வாகனத் துறைக்கு தொழில்நுட்ப பரிமாற்றத்துக்கு,  ஸ்லோவாகியா நாட்டின் ஆர்வத்தை வரவேற்கிறேன். வரலாற்றுப் புகழாகக் காணப்பட்ட இயற்கை றப்பர் தவிர, இந்தத் துறையை அதிகரிக்க, சமூக பொருளாதாரமும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. இலங்கை 06வது பெரிய ஏற்றுமதியாளராகவும் மற்றும் 8வது இயற்கை றப்பர் உற்பத்தி நாடாகவும் உள்ளது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .