2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இலங்கையின் சிறந்த SME வங்கியாக கொமர்ஷல் வங்கி

Freelancer   / 2024 மார்ச் 19 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கியானது, 2024 ஆம் ஆண்டுக்கான குளோபல் ஃபினான்ஸ் விருதுகளில் இலங்கையின் 'சிறந்த SME (சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிப்பிரிவு) வங்கியாக' அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவிகள் மற்றும் நலன்களை வழங்கும் வங்கியின் நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிப்பிரிவுக்கு பாரிய கடன் வழங்குபவராக ஏற்கனவே நிதியமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட கொமர்ஷல் வங்கி, இந்தத் துறையில் மதிப்புமிக்க குளோபல் ஃபினான்ஸ் விருதை தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் பெற்றுள்ளது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள தங்கள் நாடுகளில் சிறந்த SME வங்கிகளாக கொமர்ஷல் வங்கியுடன் இணைந்து அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் OCBC - சிங்கப்பூர், மேபேங்க் - மலேசியா, Sumimoto Mitsui நிதிக் குழு - ஜப்பான், HDFC வங்கி - இந்தியா, பிரைம் வங்கி - பங்களாதேஷ் மற்றும் Vietcombank - வியட்நாம் என்பனவாகும்.

இந்த அண்மைய விருது குறித்து கொமர்ஷல் வங்கியின் தனியார் வங்கிப் பிரிவு பிரதி பொது முகாமையாளர் திலக்ஷன் ஹெட்டிஆரச்சி கருத்துத் தெரிவிக்கையில், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிப்பிரிவானது (SME) எமக்கு எப்பொழுதும் முதன்மையான முன்னுரிமையாகும், மேலும் இலங்கையின் SME துறைக்கு கொமர்ஷல் வங்கி மிகப்பெரிய கடனுதவி வழங்குவதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் எங்கள் SME வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து பல நிலைகளில் இணைந்து செயற்படுகிறோம், அவர்களுக்கு அறிவையும் திறனையும் உருவாக்க உதவுவதுடன் மற்றும் வலையமைப்பு வசதிகளை வழங்குவதுடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான அணுகலை எளிதாக்குகிறோம்.

SME துறையினரை ஆதரிப்பதற்காக கொமர்ஷல் வங்கியின் மிக சமீபத்திய நிதியல்லாத முன்முயற்சிகளாக ஆரம்பித்து வைக்கப்பட்டவையே 'கொமர்ஷல் பேங்க் LEAP Global Linker' மற்றும் 'ComBank Trade Club' ஆகியன. இவை இரண்டும் வர்த்தக முயற்சிகளை உலகளாவிய சந்தைகளில் ஊடுருவ உதவுவதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கு மேலதிகமாக, கொமர்ஷல் வங்கி SME வாடிக்கையாளர்களுக்கான பிரத்தியேக சங்கமொன்றைக் (Club) கொண்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக, கொமர்ஷல் வங்கி Biz Club ஆனது புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குவதற்காக SME யினரை ஒன்றிணைத்து அவர்களுக்கு கடன் வழங்குவதற்கு அப்பால் கல்வி, வலையமைப்பாக்கம் மற்றும் தொடர்புடைய அதிகாரசபைகளின் நிபுணர் ஆலோசனைகள் போன்றவற்றை வழங்குகிறது. 5இ000க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் (SME யினர்) தற்போது கொமர்ஷல் வங்கியின் Biz Club இல் உறுப்பினர்களாக உள்ளனர்.

கொமர்ஷல் வங்கியின் 'திரிசக்தி' நுண் தொழில்முயற்சியாளர் கடன் திட்டம் மற்றும் கிராமப்புற பெறுமதி வாய்ந்த சங்கிலிகளை வலுப்படுத்தும் பெறுமதி சங்கிலி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் 'வர்த்தக கடன்கள்' (Biz Loans) மற்றும் 'விவசாய தங்கக் கடன்கள்' (Agri Gold Loans) போன்ற வசதிகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவை உள்நாட்டு SME பிரிவினருக்கு உதவுவதற்காக நடைமுறையில் உள்ள ஏனைய திட்டங்களாகும். மேலும் நாட்டிலுள்ள பெண் தொழில்முயற்சியாளர்களை ஆதரிப்பதற்கான முயற்சிகளும் இதில் உள்ளடங்குகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .