S.Sekar / 2023 செப்டெம்பர் 04 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி, சாவகச்சேரி கமநல சேவைகள் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யூரியா உரக் கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டார். இதில் வட மாகாண ஆளுநர் திருமதி. சார்ள்ஸ் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உணவு, விவசாய ஸ்தாபனத்தின் பிரதிநிதி விமலேந்திர ஷரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
4.63 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்தத் திட்டத்தினூடாக, பொருளாதார நெருக்கடியினால் உரத்தைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியிருக்கும் இடையளவு மற்றும் உலர் வலயங்களைச் சேர்ந்த 1 ஹெக்டெயருக்கு குறைவான சுமார் 228,000 சிறியளவிலான விவசாயிகளுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுப்பது இலக்காக அமைந்துள்ளது. ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியளிப்பில் யூரியா உரம் விநியோகத்தை உலக உணவு விவசாய ஸ்தாபனத்தினூடாக முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிகழ்வில், பிரதேசத்தைச் சேர்ந்த சிறியளவிலான நெல் விவசாயிகளுடன் நேரடியாக கலந்துரையாடலில் தூதுவர் மிசுகொஷி ஈடுபட்டதுடன், அவர்களுக்கு உதவுவதற்கான தமது உறுதியான அர்ப்பணிப்பையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பிக்கும் பெரும் போகச் செய்கையின் போது விவசாயத் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு இந்த உதவி பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
31 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
50 minute ago
2 hours ago