Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 01 , மு.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டு குடிமக்களுக்கு இலங்கையிலிருந்து உலக நாடுகளுக்கு பணத்தை அனுப்பக்கூடிய சேவையை அறிமுகம் செய்துள்ளதாக Western Union மற்றும் MMBL Money Transfer நிறுவனம் ஆகியன இணைந்து அறிவித்துள்ளன.
இந்த அறிமுகத்தினூடாக இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் அல்லது வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் முதல் தடவையாக Western Union மூலமாக வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்பக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் அம்பாறை, மட்டக்களப்பு, கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் கேகாலை அடங்கலாக 17 மாவட்டங்களின் 35 நகரங்களில் காணப்படும் 61 MMBL பகுதிகளினூடாக இந்த பணப்பரிமாற்ற சேவையை பெற்றுக் கொள்ளலாம். இந்தச் சேவை விரைவில் நாடளாவிய ரீதியில் சகல பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படும்.
200க்கும் அதிகமான நாடுகளின் அரை மில்லியனுக்கும் அதிகமான முகவர் பகுதிகளுக்கு வங்கிக் கணக்கொன்றுக்கு அல்லது பணத்தை பெற்றுக் கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் 500 அமெரிக்க டொலர்கள் வரை அனுப்பலாம்.
தெற்காசியா மற்றும் இந்தோ-சீனா பிராந்தியங்களுக்கான உப தலைவர் சோஹினி ரஜோலா கருத்துத் தெரிவிக்கையில், “சர்வதேச பொருளாதாரத்தில் இலங்கை முன்னேற்றமடைந்து வரும் நிலையில், சர்வதேச மய்யம் எனும் வகையில், சர்வதேச பண அனுப்புகைகள் மற்றும் கொடுப்பனவுகள் போன்றவற்றை துரிதமாக மேற்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். இது பொருளாதார வளர்ச்சி, சமூக அபிவிருத்தி மற்றும் நிதி உள்ளடக்கம் போன்றவற்றுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது” என்றார்.
2,000 க்கும் அதிகமான MMBL பகுதிகள் செயற்படுத்தப்பட்டு, இலங்கையில் வசிக்கும் மற்றும் பணியாற்றும் வெளிநாட்டு குடிமக்களுக்கு தமது சொந்த நாடுகளிலிருக்கும் அன்புக்குரியவர்களுக்கு பணத்தை அனுப்பக்கூடிய வசதியை வழங்குவதுடன், சர்வதேச கல்வி, மருத்துவ சேவைகள், பிரயாணம் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணத்தை பெற்றுக் கொடுக்க முடியும்.
27 minute ago
35 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
35 minute ago
38 minute ago