Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
MRF டயர் நிறுவனம் இலங்கையில் தனது புதிய Tyre & Service Centre நிலையத்தை திறந்துவைத்துள்ளது.
இந்தச் சேவை நிலையத்தினூடாக சக்கர சீரமைப்பு (Wheel alignment), சக்கர சமநிலை (Wheel balancing), தன்னியக்கமான டயர் பொருத்துதல் (Automatic tyre fitment) போன்ற முற்று முழுதான டயர் சம்பந்தப்பட்ட சேவைகளை, புத்தம் புதிய இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்டு வழங்குகிறது.
இதற்கு மேலதிகமாக, இந்தச் சேவை நிலையத்தினூடாக, ரியூப் அற்ற டயர்களுக்கான திருத்த வேலைகளையும் செய்து கொள்ள முடியும். அத்துடன் அனைத்து வகுப்பு வாகனங்களுக்குமான பரவலாக கிடைக்கக்கூடிய டயர்களை MRF வழங்குகின்றது.
இதன் மூலம் MRF டயர்கள் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர்களின் தெரிவுகளை உள்ளடக்கி தனது வாடிக்கையாளர்களை நாடி வருகின்றது. இங்கு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான டயரை கொள்வனவு செய்யும் அதேவேளை அதனை வாகனத்தில் பொருத்தும் வரை நிம்மதியாக ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.
இந்நிலையத்தின் திறப்பு விழா, MRF சந்தைப்படுத்தல் நிறைவேற்று உபதலைவர் கொஷி கே வாகீஸ், சர்வதேச வர்த்தகப் பணிப்பாளர் கிருஷ்ணகுமார் மேனன், வதிவிட முகாமையாளர் கிரிஷாந்த பீரிஸ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதன் காட்சியறையும் அதிநவீன சேவைகளும் கொஷி கே வாகீஸினால் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
MRF Tyres & Service Centre நிலையத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக, இங்கு பணியாற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் சக்கர சீரமைப்பு, சக்கர சமநிலை மற்றும் நிறுவனத்தினால் வழங்கப்படும் ஏனைய அதிநவீன சேவைகள் சம்பந்தமான அனைத்து பயிற்சிகளையும், MRF Tyredrome Training Centre எனும் நிலையத்திலிருந்து பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. உயர்தரத்திலான 1000 Tyres & Service Centre நிலையங்களை MRF தன்னகத்தே கொண்டுள்ளது.
இதன் மூலம் இலங்கையிலுள்ள மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு திருப்தியான டயர் கொள்வனவு அனுபவத்தையும் சிறந்த சேவையும் கொண்டு வருகின்றது.
MRF Tyres & Service அங்கிகாரம் பெற்ற கிளையான சஞ்ஜீவ டயர் ஹவுஸ் பேருவளையில் 2018 அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago