2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் மஹிந்ரா GX 3600 டிராக்டர்கள்

Editorial   / 2018 ஏப்ரல் 13 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்ரா அன்ட் மஹிந்ரா லிமிட்டெட் மற்றும் டீசல் அன்ட் மோட்டார் என்ஜினியரிங் பீஎல்சி (டிமோ) ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து மஹிந்ரா GX 3600 டிராக்டரை அண்மையில் இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளன. ஜப்பானிய வர்த்தக நாமமான மிட்சுபிஷி மஹிந்ரா அக்ரிகல்ச்சரல் மெஷினரி கம்பனி லிமிட்டெட் நிறுவனத்தின் கீழ், இப்பிரிவில் அறிமுகமாகும் மிகவும் இலகுரக, சகதி நிலத்துக்குச் சிறப்பான 4WD டிராக்டராக இது காணப்படுகின்றது. 

25 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் மஹிந்ரா டிராக்டர்களுக்கான அங்கிகரிக்கப்பட்ட பிரதிநிதியாக ‘டிமோ’ செயற்பட்டு வந்துள்ளதுடன், இப்புதிய மிட்சுபிஷி மஹிந்ரா அக்ரிகல்ச்சரல் மெஷினரி கம்பனி லிமிட்டெட் வர்த்தக நாமமும் இலங்கையில் ‘டிமோ’ நிறுவனத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்படவுள்ளது.  

 இந்தியாவைத் தளமாகக் கொண்ட 19 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பு மிக்க மஹிந்ரா குழுமத்தின் ஓர் அங்கமே மஹிந்ரா அன்ட் மஹிந்ரா லிமிட்டெட். 

விவசாய இயந்திரங்கள் சார்ந்த ஒரு மூலோபாயப் பங்குடமையாக மிட்சுபிஷி ஹெவி இன்டஸ் ரீஸ் மற்றும் மஹிந்ரா அன்ட் மஹிந்ரா லிமிட்டெட் ஆகிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், 2015 ஆம் ஆண்டில் மிட்சுபிஷி மஹிந்ரா அக்ரிகல்ச்சரல் மெஷினரி கம்பனி லிமிட்டெட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும், பல்வேறுபட்ட நாடுகளில் தொழில்நுட்பம் மற்றும் செயற்திறன் ஆகியவற்றை நிரூபித்துள்ள மஹிந்ரா GX3600, இந்த வர்த்தக நாமத்தின் கீழான பிரதான உற்பத்தியாகும். அதியுயர் ‘ஜப்பானிய தொழில்நுட்பம்’ மற்றும் சர்வதேச வர்த்தக நாம வலு ஆகியவற்றுக்குப் பெயர்பெற்றுள்ளமையானது, இலங்கையில் தனது போட்டித்திறனை வலுப்படுத்திக்கொள்ள அதற்கு இடமளிக்கும்.  

1,100 கிலோ எடையுடன் மஹிந்ரா GX3600 திகழ்வதுடன், வயல் நிலங்களில் பயன்படுத்தும்போது, அது புதைந்து போவதிலிருந்து தடுக்கின்றது. 3-சிலின்டர் இயந்திர வலுவுடன், மிகவும் குறைந்த RPM விசையில் அதிகபட்ச வலுவை வழங்குகின்றது. power shuttle கொண்ட அதிநவீன 8x8 gear ratio தொழில்நுட்பமானது இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தெரிவு செய்யப்பட்ட கியர்களுக்கு இடையில் திசையை மாற்றுவதற்கான தனித் தொழிற்பாட்டுக்கு இடமளிக்கின்றது. 

1,200 கிலோ எடையைச் சுமக்கும் ஆற்றல், இலகுவாக மாற்றக்கூடிய திறன் manoeuvrability மற்றும் சௌகரியமாகச் செலுத்தும் வசதி போன்ற பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள மஹிந்ரா GX3600, தனது வாடிக்கையாளர்கள் தன்னை, இலகுவாகப் பேணிப் பராமரிப்பதற்கான உத்தரவாதத்தையும் அவர்களுக்கு வழங்குகின்றது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .