2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக SLT-MOBITEL அழைப்பு

S.Sekar   / 2022 ஜூலை 18 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

22 மில்லியன் இலங்கையர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் தேடலில், SLT-MOBITEL, ‘Dreamers’ - தொலைநோக்கு கொண்டவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், புத்திசாலிகள் மற்றும் வழமைக்கு அப்பால் சிந்திக்கக்கூடியவர்கள் என சகல தரப்பினரையும் தமது செயற்படும் தீர்வுகளுடன் முன்வந்து, இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பாரிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்க கைகோர்க்குமாறு அழைப்புவிடுத்துள்ளது.

SLT-MOBITEL இனால் தனது #NoDreamTooBig எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், அதனூடாக அனைத்து இலங்கையர்கள் வசமும் காணப்படும் அதே தொழில்நுட்பம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்கள் போன்றவற்றை பயன்படுத்தி புத்தாக்கமான முறையில் பாரிய கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்காக பணியாற்ற இணையுமாாறு அழைத்துள்ளது. இந்த உறுதியற்ற காலப்பகுதியிலிருந்து நாம் விடுபட்டு ஒரு இலங்கையாக முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க தேவையான கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் இந்த Dreamers Wanted திட்டத்துடன் இணையுமாறு SLT-MOBITEL அழைத்துள்ளது.

தமக்குக் காணப்படும் அறிவு, வளங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாதாரணமானவற்றைக் கொண்டு அசாதாரணமானவற்றை உருவாக்க முனையும் விண்ணப்பதாரிகளுக்கு www.sltmobitel.Ik/dreamerswanted எனும் இணையப்பக்கத்துக்கு சென்று தமது தொழிற்படக்கூடிய தீர்வு அல்லது கண்டுபிடிப்பு தொடர்பான விளக்கமளிக்கும் சிறிய வீடியோ ஒன்றை தயாரித்து சமர்ப்பிக்குமாறு கோரப்படுவர். தமது தெரிவுக்குரிய மொழியில் இதனை அவர்களால் சமர்ப்பிக்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன், விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் சுயமான அறிவுறுத்தல் அவர்களுக்கு வழங்கப்படும்.

Dreamers Wanted Evaluation Team (DWET) என்பதில் SLT-MOBITEL அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்விசார் நிபுணர்கள் ஆகியோர் அடங்கியிருப்பதுடன், விண்ணப்பங்களை மீளாய்வு செய்து தெரிவு செய்யும் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பார்கள். அதனூடாக மேலதிக மேம்படுத்தலுக்காக சிறந்த சிந்தனைகள் தெரிவு செய்யப்படுவது உறுதி செய்யப்படும். தெரிவு செய்யப்பட்டதும், நேர்காணல்கள், விளக்கமளிப்பு நிகழ்வுகள் மற்றும் மாதிரி விளக்கங்கள் மற்றும் வினா விடை அமர்வுகளுக்கு முகங்கொடுப்பார்கள். அதனூடாக சிறந்த கண்டுபிடிப்புகள் தெரிவு செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டு, அவை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான ஆதரவு உடனடியாக வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

SLT-MOBITEL இன் முன்னணி குழும R&D செயற்திட்டமான ‘The Embryo’இனால், SLT குழுமம் மற்றும் கல்விமான்கள், தொழிற்துறை, ஒன்றிணைப்பாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்கள் என பல தரப்பினரையும் ஒன்றிணைத்து தேசத்துக்கு சேவையாற்றுவதற்கான பெறுமதியான அறிவு மற்றும் திறன்கள் பகிர்வு முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், பன்நாளிகை புத்தாக்க கட்டமைப்பை நவீன தொழில்நுட்ப தீர்வுகளைப் பின்பற்றி முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. இந்த அமைப்பினால் ‘Dreamers Wanted’ திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. புத்தாக்கத்தை உள்வாங்கியதன் பின்னர், ‘Dreamers’உடன் இணைந்து தேசத்தின் தேவைகளின் பிரகாரம் SLT-MOBITEL செயலாற்றும். வங்கிகள், முதலீட்டாளர்கள், SLT-MOBITEL விற்பனை மற்றும் இதர விநியோக வலையமைப்புகள் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு தீர்வை செயற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும். SLT-MOBITEL இடமிருந்து நிறுவனசார் ஆதரவை Dreamers பெறுவார்கள். இதில் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை, ஏதேனும் பிரச்சனைகளிலிருந்து மீள்வதற்கு அவசியமான ஒழுங்குபடுத்தல் ஆலோசனை, நிதி ஆதரவு மற்றும் உட்கட்மைப்பு நிறுவுகை போன்றன அடங்கியிருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .