Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஏப்ரல் 25 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபள்கள் உற்பத்தியாளரான, களனி கேபள்ஸ் பிஎல்சி நிறுவனத்தினால், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களுக்கு வயர் உற்பத்தி தொடர்பான அறிவூட்டல் நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அக்கரைப்பற்று, மட்டக்களப்பு மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 50 தொழில்நுட்பவியலாளர்களுக்கு களனி விசுர சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சியின் கீழ் இந்தப் பயிற்சி வழங்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பிலிருந்து களனி கேபள்ஸ் நிறுவனத்துக்கு சமூகமளிக்கவும், மீண்டும் தமது சொந்த பகுதிகளுக்கு பயணிப்பதற்கும் போக்குவரத்து வசதிகள் நிறுவனத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. களனி மற்றும் சியம்பலாபே பகுதிகளில் அமைந்துள்ள களனி கேபள்ஸ் நிறுவனத்தின் இரு தொழிற்சாலைகளுக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இதனூடாக இவர்களுக்கு வெவ்வேறு வகையான வயர் உற்பத்தி தொடர்பான அறிவூட்டல் வழங்கப்பட்டிருந்தது.
மேலும், அவர்களின் அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிப்பட்டறை மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்ப பிரிவில் பின்பற்றப்படும் நவீன முறைகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் போன்றன மட்டக்களப்பு நீர் சுத்திகரிப்பு பகுதியின் பிரதம பொறியியலாளரான பி.சுதாகரனினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
களனி கேபள்ஸ் பிஎல்சி விற்பனை முகாமையாளர் (விநியோகம்) சமிந்த வைத்தியதிலக மற்றும் விற்பனைக் கட்டுப்பாட்டாளர் ரால்ஃவ் ரொஷான் ஆகியோர் வலய விற்பனை முகாமையாளர் வி.அரவிந்தனுடன் இணைந்து மேற்கொண்டிருந்த ஆய்வுகளின் பிரகாரம், இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களுக்கு வயர் உற்பத்தி தொடர்பில் போதியளவு அறிவின்மை காணப்படுவதை கண்டறிந்திருந்தனர். எனவே, இவர்களை கொழும்புக்கு அழைத்து வந்து, வெவ்வேறு வயர் உற்பத்தி செயன்முறைகள் தொடர்பான விளக்கங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு வாய்ப்பை வழங்க இந்த அணி தீர்மானித்திருந்தது.
களனி கேபள்ஸ் பிஎல்சியின் விற்பனை பொது முகாமையாளர், அனில் முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “களனி விசுர சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சியினூடாக, நாடு முழுவதையும் சேர்ந்த இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களுக்கு அறிவூட்டல் மேற்கொள்ளப்படுகிறது. சுமார் 20,000 இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்கள் இதுவரையில் களனி விசுர அங்கத்துவத்தை பெற்றுள்ளனர். தமது குடும்பத்தாருடன் இணைந்து, அவர்கள் “களனி விசுர” அனுகூலங்களை தொடர்ச்சியான வருடம் முழுவதும் அனுபவிக்கின்றனர்.
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago