2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இஷானா ஸ்பைஸ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு விருது

Gavitha   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழாவின் போது வாசனைப் பொருள் ஏற்றுமதி பிரிவில் 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் மிக அதிகமான வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித் தந்த ஏற்றுமதியாளருக்கான ஜனாதிபதி விருதினை இஷானா எக்ஸ்போர்ட்ஸ் தனியார் நிறுவனத்தின் அதிபர் வை. எம் இப்ராஹிம் பெற்றுள்ளார்.

மிளகு, சாதிக்காய், சாதிபத்திரி, கொறுக்காய்புளி, கராம்பு, காய்ந்த பாக்கு போன்ற வாசனைத் திரவிய பொருட்களை விவசாயிகளிடமிருந்தும் வியாபாரிகளிடமிருந்தும் உச்ச விலைக்குக் கொள்வனவு செய்து உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாப்பதைத் தனது பிரதான நோக்கமாக எண்ணி இஷானா எக்ஸ்போர்டஸ் நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.

இஷானா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருதுகள் பலவற்றை வென்றுள்ளதோடு 2001ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் பெற்ற ACTULOAD விருது, 2004 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் லண்டன் நகரில் பெற்ற BID International Quality Crown விருது, 2006ஆம்; ஆண்டில் இந்திய தேசத்திடமிருந்தப் பெற்ற Indian Excellence விருது மற்றும் NCE விருது ஆகியவைகள் அவற்றில் முக்கியமானவை ஆகும்.

'எமது அடிப்படை நோக்கம் உள்நாட்டு விவசாயிகளைக் கட்டியெழுப்புவதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதாகும். அதற்காக இன, மத, கட்சி பேதிமின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும்.இல்லை, முடியாது என்ற பேச்சுக்கே இடம் வைக்காமல் தன்னால் முடியும் என்ற உணர்வுடன் செயற்பட வேண்டும். இவ்வாறான விருதுகள் கிடைப்பதால் நாம் மேலும் ஊக்கம்  பெறுவோம்.' என தனது வெற்றி குறித்து கருத்துரைத்த இஷானா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் அதிபர் வை.எம் இப்ராஹிம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X