Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 மே 11 , மு.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்சாரம் என்பது தொழிற்றுறை சார்ந்த சமூகம் மற்றும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ளது. நாட்டில் அண்மையில் நிகழ்ந்த மின்சார தடங்கல்கள் காரணமாக உற்பத்தி மற்றும் தினசரி வாழ்க்கைக்கு தடங்கலில்லாத மின்சார விநியோகத்தில் நாம் தங்கியிருக்கிறோம் என்பது மட்டும் புலப்படாமல், நாடு முழுவதையும் சேர்ந்த இல்லங்கள் மற்றும் வியாபாரங்களுக்கு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி, பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தியிருந்தன.
இது போன்ற சூழ்நிலைகளிலிருந்து முற்காப்பு நடவடிக்கையாக மின்பிறப்பாக்கிகளில் பலர் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். மின்பிறப்பாக்கி ஒன்றின் பயன்பாடு என்பது, மின்சாரத்தை பெற்றுக் கொள்ள தங்கியிருக்கக்கூடிய மூலமொன்றை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. மின்பிறப்பாக்கிகள் நீண்ட நாள் உபயோகத்திற்கான திறன் கொண்டன.
ஆனாலும், ஏனைய சிக்கலான இயந்திரங்களைப் போலவே, இவற்றையும் முறையாக பராமரிக்க வேண்டியுள்ளது.
மின்பிறப்பாக்கியை முறையாக பராமரிப்பதன் மூலம் அதில் பாரிய பழுதுகள் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ள முடியும் என்பதுடன், மின்பிறப்பாக்கியின் ஆயுளையும் நீடிக்கும் வகையில் அமைந்திருக்கும். மேலும், மின்பிறப்பாக்கியை முறையாக செயற்படுத்துவதன் மூலமாக அதிகளவு தங்கியிருக்கும் திறனை பெற்றுக் கொள்ளலாம். இல்லங்கள் மற்றும் வியாபாரங்களில் பயன்படுத்தப்படும் மின்பிறப்பாக்கிகளில் தொடர் பராமரிப்பு என்பது பின்பற்றப்பட வேண்டும்.
யுனைட்டட் டிராக்டர் அன்ட் இக்யூப்மன்ட் பிரைவட் லிமிட்டெட் பவர் சிஸ்டம்ஸ் பொது முகாமையாளர் மஞ்ஜூள விதானகே கருத்து தெரிவிக்கையில், 'மின்பிறப்பாக்கிகளின் சீரான செயற்பாட்டை உறுதி செய்து கொள்வதற்கு பராமரிப்பு அட்டவணை ஒன்றை பேணுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்' என்றார்.
'தினசரி மேற்பார்வை செயற்பாட்டை நாம் பரிந்துரைக்கிறோம். பிரதானமாக பராமரிப்பு தொழில்நுட்ப பணியாளரின் செய்பணியில் என்ஜின் எண்ணெய் மட்டம், கூலன்ட் மட்டம், டீசல் மட்டம் மற்றும் பற்றரியின் வோல்ட் அளவு போன்றவற்றை பரிசோதிப்பது அமைந்துள்ளன' என்றார்.
இந்தச் செயற்பாட்டை வாராந்த பராமரிப்பு உறுதிப்படுத்தல் ஆவணம் ஒன்றை பேணுவதன் மூலம் தொடர்ந்து முன்னெடுக்க முடியும். இந்த நடவடிக்கையில், மின்பிறப்பாக்கியை Auto mode முறையில் தன்னியக்க ஆரம்பம் மற்றும் போதியளவு எரிபொருள் காணப்படுகின்றமையை உறுதி செய்ய முடியும். என்ஜின் ஆகக்குறைந்தது பத்து நிமிடங்கள் வரை செயற்படுத்தப்பட வேண்டும். பற்றரியின் நீர் மட்டம் மற்றும் நீரின் தன்மை போன்றன பரிசோதிக்கப்பட வேண்டும்.
ஆனாலும், சூழ்நிலையைப் பொறுத்து, அதிகளவு மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய தீர்வுகளை வசதி கருதியும் தங்கியிருக்கும் தன்மையில் மாற்றங்களை ஏற்படுத்தாமலும் மேற்கொள்ள முடியும்.
மாதாந்தம் பரிபூரண மேற்பார்வை செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும். இதன்போது மின்பிறப்பாக்கியின் கூலன்ட் மற்றும் என்ஜின் எண்ணெய் மட்டங்கள் உறுதி செய்து கொள்ளப்படும். என்ஜின் பெல்ட்கள் மற்றும் என்ஜினிலிருந்து வெளிப்படும் சத்தங்கள் குறித்து மேலதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். எனவே மாதாந்தம் முறையான மேற்பார்வை தவறாமல் முன்னெடுக்கப்படுவது பரிந்துரைக்கப்படுகிறது.
விதானகே தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'ஃபில்டர்கள் மற்றும் திரவங்களை மாற்றிக் கொள்வதற்கான செலவீனம் என்பது மின்பிறப்பாக்கி ஒன்றை சொந்தமாக செயற்படுத்துவதற்கு ஏற்படும் செலவில் 3% ஆக மாத்திரமே அமைந்துள்ளது.
எனவே, இந்தப் பராமரிப்பு செயற்பாட்டை முன்னெடுப்பது என்பது பழுதடைந்த பின்னர் அதனை பழுதுபார்ப்பதற்கு செல்லும் செலவை விட மிகவும் குறைவானது. பழுதுபார்ப்பதற்கு செலவாகும் தொகை என்பதற்கு மேலதிகமாக, குறித்த பழுதுபார்ப்பு நடைபெறும் காலப்பகுதியில் செயலிழந்து காணப்படுவது, அதனால் ஏற்படும் அசௌகர்யம் மற்றும் மனஉளைச்சல் போன்றவற்றுக்கும் முகங்கொடுக்க நேரிடும்' என்றார்.
மற்றுமொரு முக்கிய பிரிவாக, முறையான பராமரிப்பு செயற்பாட்டை பின்பற்றுவதற்கு மேலதிகமாக, சேவைத் திட்டம் ஒன்றை பின்பற்றுவதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.
விநியோகஸ்த்தர்கள் மற்றும் வர்த்தக நாமங்கள் ஆகியவற்றைப் பொறுத்து சேவை மற்றும் பராமரிப்பு ஆகியன மாறுபடும் நிலையில், உற்பத்தியாளரின் பரிந்துரைப்பின் பிரகாரம் சேவை அட்டவணையை பின்பற்றுவதற்கு வாடிக்கையாளர்கள் உறுதி செய்வதன் மூலமாக மின்பிறப்பாக்கியின் ஆயுள் காலத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.
யுனைட்டட் டிராக்டர் அன்ட் இக்யூப்மன்ட் பிரைவட் லிமிட்டெட் வாடிக்கையாளர் உதவி செயற்பாடுகளுக்கான உதவி முகாமையாளர் இரோஷன் தனபால கருத்து தெரிவிக்கையில், 'எமது சேவை உடன்படிக்கை என்பது பொதுவாக 365 நாட்கள், 24/7 நேரமும் வழங்கப்படுவதாகும். இதன் மூலமாக எமது வாடிக்கையாளர்களுக்கு துரித காலப்பகுதியில் சேவை வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. ஆனாலும், பாவனையாளர்களின் பிரயோகம் மற்றும் தேவை ஆகியவற்றைப் பொறுத்து இதனை மாற்றியமைத்துக் கொள்ள முடியும். எமது வாடிக்கையாளர்கள் பகுதிகளுக்கு நாம் அடிக்கடி விஜயம் செய்வதுடன், வருடத்தில் மேற்பார்வை விஜயங்களையும் நிர்ணயித்து வருகிறோம். இவையும் அவர்களின் தேவைகளை பொறுத்து வேறுபடும். எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்கும் 'மேம்படுத்தப்பட்ட பெறுமதி' ஆக இது அமைந்துள்ளது' என்றார்.
தனிநபர் மற்றும் வியாபாரங்கள் மின்பிறப்பாக்கிகளை கொள்வனவு செய்யும் போது, மின்தடங்கல்கள் ஏற்படும் போது தமக்கு தடைகள் எதுவுமின்றி தொடர்ச்சியாக மின்விநியோகம் கிடைக்க வேண்டும் என்பதை எதிர்பார்ப்பதுடன், தாம் கொள்வனவு செய்யும் சாதனம் நீண்ட காலம் தங்கியிருக்கக்கூடிய சேவையை பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கிறது.
'ஆனாலும், இந்த பெறுமதி வாய்ந்த சாதனத்தில் மேற்கொண்டுள்ள முதலீடு தொடர்பில் அவர்கள் அவதானமாக இருக்க வேண்டும், பராமரிப்பதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்' என தனபால மேலும் குறிப்பிட்டார்.
'ஒவ்வொரு 500 மணித்தியாலங்களுக்கும், அல்லது ஒவ்வொரு ஆறு மாத காலப்பகுதியில் ஒரு தடவையேனும் எண்ணெய் பரிசோதிக்கப்பட்டு தேவையெனில் மாற்றிக் கொள்ள வேண்டும். மின்சாரம் நிலையானதான காணப்படும் வேளையில், மின்பிறப்பாக்கி பயன்படுத்தப்படாவிடின் உற்பத்தியாளரால் பரிந்துரைக்கப்பட்ட இயங்க ஆரம்பிக்கும் காலத்தை விட அதிகளவு காலத்தை எடுக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்' என்றார்.
விதானகே குறிப்பிடுகையில், 'மின்பிறப்பாக்கியில் காணப்படும் பொதுவான பிரச்சினையாக, தடையின்றிய இலங்கை மின்சார சபையின் மின்விநியோகம் நிகழ்வதால், மின்பிறப்பாக்கியின் ஆகக்கூடிய இயங்கு நேர கணிப்பீட்டை அடைய நீண்ட காலம் எடுப்பது. இதன் காரணமாக எண்ணெய் அதன் இழுவை திறனை இழந்து விடுவதுடன் தரமும் வீழ்ச்சியடைகிறது. எனவே, உற்பத்தியாளரின் பரிந்துரையின் பிரகாரம் மின்பிறப்பாக்கி பரிசோதிக்கப்பட்டு சேவைக்குட்படுத்தப்பட வேண்டும்' என்றார்.
மின்பிறப்பாக்கியின் பராமரிப்பின் போது எண்ணெய் பரிசோதனை என்பது, முக்கியமானதாக அமைந்துள்ளது. கண்பார்வை மட்டத்திலிருந்து மாத்திரம் இதனை மேற்கொள்ள முடியாது. ஆனாலும், பரிசோதனைகூட மட்டத்தில் விஞ்ஞான ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டும். இயக்க நிலையிலுள்ள என்ஜினிலிருந்து மாதிரி எண்ணெய்யை பெற்று ஆய்வுகூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்ப வேண்டும். UTEஇல் கட்டர்பில்லருக்கு நாம் சிங்கப்பூர் அல்லது இந்தியாவில் அமைந்துள்ள ஆய்வுகூடத்துக்கு அனுப்புவோம். இதனை Scheduled Oil Sampling(SOS) பரிசோதனை என அழைப்போம்.
பெறுபேறுகளின் அடிப்படையில், எண்ணெயின் தரத்தை மதிப்பிட்டு மாற்ற வேண்டிய தேவை காணப்படுகின்றதா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும். மிக முக்கியமாக பரிசோதனை முடிவுகளில் என்ஜினின் ஏதேனும் பகுதிகள் தேய்வாக காணப்படுகின்றனவா என்தையும் உறுதி செய்து கொள்ளலாம். இந்தச் செயற்பாட்டின் மூலமாக முன்கூட்டியே பராமரிப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து செலவீனம் நிறைந்த பழுதுகள் மற்றும் செயலிழப்பு நிலையில் காணப்படும் நேரங்கள் போன்றன குறைக்கப்படும்' என்றார்.
மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்தும் போது, வாடிக்கையாளர்கள் பயன்படுத்தப்படும் எரிபொருட்களின் தரம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். 'Ultra-low-sulfur டீசல் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட தூய டீசல் வகையாகும். பெருமளவான மின்பிறப்பாக்கி உற்பத்தியாளர்களால் பரிந்துரைக்கப்படும் எரிபொருளாக அமைந்துள்ளது.
துரதிர்ஷ்டவசமாக இலங்கை அபிவிருத்தியடைந்துவரும் நாடு எனும் வகையில், இது போன்ற உயர் தரம் வாய்ந்த எரிபொருள் இதுவரையில் எமது சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை' என தனபால மேலும் குறிப்பிட்டார்.
இந்தச் சந்தர்ப்பத்தில், வாடிக்கையாளர்கள் எரிபொருளை மாசு ஏற்படாதவாறு களஞ்சியப்படுத்தி வைத்திருக்க வேண்டும். அதனை களங்கப்படுத்தக்கூடாது. 'எரிபொருள் மாசு ஏற்படாத வகையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன், நம்பிக்கை வாய்ந்த விநியோகஸ்த்தரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட வேண்டும்' என்றார்.
இந்த முக்கியமான செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு பயிற்சி பெற்ற தொழில்நுட்பவியலாளர் ஒருவருக்கு மாற்றீடு என்பது இல்லை என்பதை நிபுணர்கள் கூட ஏற்றுக் கொண்ட நிலையில், இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு வாடிக்கையாளர்களும் பயிற்சிகளை பெற்றிருப்பது சிறந்தது. 'நாம் ஒரு நாள் அடிப்படை பயிற்சி நிகழ்வை எமது பயிற்சி நிலையத்தில் முன்னெடுக்கிறோம். இதன் போது வாடிக்கையாளர்களுக்கு தமது மின்பிறப்பாக்கிகளில் முறையான பராமரிப்பு மேற்பார்வைகளை மேற்கொள்வது தொடர்பில் அடிப்படை விடயங்கள் குறித்து விளக்கமளிக்கிறோம்' என்றார்.
மின்பிறப்பாக்கிகள் மூலதன முதலீடுகளாகும். முறையான மேற்பார்வை செயற்பாடுகளுக்கு மேலதிகமாக, ஒவ்வொரு 10,000 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை, என்ஜினைய முழுமையாக புதுப்பித்துக் கொள்வது சிறந்தது. 'என்ஜின் ஒன்றுக்கு ஆயுள் காலம் உள்ளது. பொதுவாக உற்பத்தியாளர் ஒருவரால் பரிந்துரைக்கப்படுவதற்கு மேலதிகமாக, மின்பிறப்பாக்கியின் நிலையை பொறுத்து எம்மால் பழுதுபார்ப்பு மட்டங்களை மாற்றிக் கொள்ளலாம். இரு வகையான பழுதுபார்ப்புகள் காணப்படுகின்றன. பழுது ஏற்படுவதற்கு முன்னர், பழுது ஏற்பட்டதற்கு பின்னர் அவையாகும்' என்றார்.
விதானகே தொடர்ந்து விவரிக்கையில், 'என்ஜினை முழுமையாக பரிசோதித்துக் கொள்வதற்கான செலவு என்பது புதிய அலகொன்றை கொள்வனவு செய்வதில் 60 சதவீதமாகும். எனவே, உற்பத்தியாளரின் பரிந்துரைப்பின் பிரகாரம் தமது மின்பிறப்பாக்கல் இயந்திரத்தில் முழுமையான பரிசோதனைகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு அதே மட்ட உத்தரவாதம் வழங்கப்படும் என்பதுடன் புதிதாக மாற்றீடு செய்யப்பட்ட சாதனங்களின் மூலமாக சிறந்த வினைத்திறன் உறுதி செய்யப்படும்' என்றார்.
7 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago