Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2020 ஜூன் 12 , பி.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரமக திட்டம், ராகமையில் அமைந்துள்ள வட கொழும்பு போதனா வைத்தியசாலை, பாணந்துறை தள வைத்தியசாலையில் COVID -19க்கான வெளிப்புற பரிசோதனை மய்யங்களை நிறுவியுள்ளது. பெரமக என்பது, மருந்து, சுகாதாரதுறை நிபுணர் வைத்தியர் சஞ்சய் பெரேரா தலைமையிலான, தொற்று நோய்கள் நிபுணர் வைத்தியர் சங்க குருகுலரத்ன, MD; பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தனளூ தற்போது பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமான ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சியின் நிறுவனர்களான VR/gyp குடும்பம் ஆகியோர், சுகாதார, சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சகம், இலங்கை விமானப்படை ஆகியவற்றுடன் இணைந்து எடுக்கும் கூட்டு முயற்சியாகும்.
வைத்தியர் குருகுலரத்னவினது, ஒரு யோசனைக்கு அமைய, வெளிப்புற பரிசோதனை மையங்கள், இயற்கை காற்றோட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் 33 அரசாங்க வைத்தியசாலைகளில் வைரஸ் பரவும் அபாயத்தைத் தணிக்க உதவும் திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக இந்த இரண்டு மையங்களும் அமைகின்றன.
அதிக ஆபத்துள்ள வெளிநோயாளிகளை அவர்கள் வைத்தியசாலையில் நுழைவதற்கு முன்பு அடையாளம் காண, இத்தகைய மய்யங்கள் SARS போன்ற தொற்றுநோய்களின் போது சர்வதேச அளவில் திறம்பட பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் சுகாதாரப் பணியாளர்கள், வைத்தியசாலையில் உள்ள பிற நோயாளிகளுக்கு நோய் பரவும் அபாயம் குறைகிறது. கடுமையான சுவாச நோய்த்தொற்றுகளை நிர்வகிக்க இயற்கை காற்றோட்டத்தைப் உபயோகப்படுத்தும் சிகிச்சை மையங்களை பயன்படுத்துவது என்பது உலக சுகாதார அமைப்பால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு கருத்தாகும்.
இந்தத் திட்டம் குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க கறுத்து தெரிவித்தார். “COVID -19 தொற்றுநோய் ஒரு முன்னோடியில்லாத நெருக்கடி, அதை தோற்கடிக்க புதுமையான யோசனைகள் தேவை. வைத்தியர் சங்க குருகுலரத்ன இத்துறையில் நிபுணர் ஆவார், மேலும் அவரது எண்ணத்தை உயிர்ப்பிக்க தேச சிந்தனையுள்ள இலங்கையர்கள் ஒன்று திரண்டு வருவது என் மனதைத் தொட்டது. இந்த முதல் கட்டத்துக்கு நிதியுதவி வழங்க ஏசுஃபலி குடும்பம் முன்வந்ததற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
ஏசுஃபலி குடும்பத்தின் நிதி ஆதரவுடன், இலங்கை விமானப்படை எயார் கொமதோரு உதுல விஜேசிங்க தலைமையில் கட்டமைப்புகளை உருவாக்க பொறியியல் நிபுணத்துவத்தையும் உழைப்பையும் வழங்கியது, மேலும் திரு. சனத் தஸநாயக்க தலைமையிலான ஹேமாஸ் குழு மேலதிக திட்ட மேலாண்மை ஆதரவை வழங்கியது.
இது குறித்து கூட்டு அறிக்கை விடுத்த முர்தசா, அவந்தி ஏசுஃபலி, “அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கு சமமான அணுகல் தேவை என்பதை, ஒரு குடும்பமாக நாங்கள் எப்போதும் நம்பியுள்ளோம். இந்த வகையில், நாட்டின் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு, COVID -19 நோயாளிகளின் துரிதமான அடையாளம் காணல் ஆகியவற்றில் பணியாற்றுவது மிக முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். இந்தத் திட்டத்தின் மூலம் நம் நாட்டுக்கு சேவை செய்ய வாய்ப்பு பெற்றமை நாங்கள் தாழ்மையுடன் வரவேற்கிறோம். பெரமக திட்டத்தை ஆதரித்தமைக்காகவும், அதை விரைவாக செயல்படுத்துவதை சாத்தியமாக்கியதற்காகவும் சுகாதார அமைச்சகம், இலங்கை விமானப்படைக்கும், குறிப்பாக வைத்தியர் லால் பனாபிடிய, வைத்தியர் அன்வர் ஹம்தானி, எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் ஆகியோருக்கு நன்றி கூறுகிறோம்” என்று குறிப்பிட்டனர்.
பெரமக திட்டத்தின் உறுப்பினர்களால் முதல் வெளிப்புற பரிசோதனை மய்யத்தை வைபவரீதியாக ஒப்படைக்கும் வைபவம் 2020 ஜூன், 09 திகதி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லால் பனாபிடிய, எயார் மார்ஷல் ருசிர சமரசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் ராகமையில் நடைபெற்றது.
'COVID -19 கொரோனா வைரஸின் அதிவேகமாக பரவுவதற்கான திறன் காரணமாக, சாத்தியமான நோயாளிகளை முன்கூட்டியே அடையாளம்கானல், தனிமைப்படுத்தல் மிக முக்கியமானது. இந்த வெளிப்புற பரிசோதனை மையங்கள் வைத்தியசாலை ஊழியர்களையும் நோயாளிகளையும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க நீண்ட தூரம் செல்லும், மேலும் தொற்றுநோயை மிகவும் பயனுள்ள முறையில் எதிர்த்துப் போராடுவதற்காக வைத்தியசாலையில் இம்மையங்களை செயல்படுத்த நாங்கள் முழுமையாக தயார் நிலையில் உள்ளோம்” என்று வட கொழும்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் று. யு. ஆ. ஷெல்டன் பெரேரா கூறினார்.
COVID -19 தொற்றை நாட்டின் அனைத்து பங்குதாரர்களின் கூட்டு முயற்சியால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். பெரமக திட்டம், ஒரேன்ஜ் இலெக்ட்ரிக், செலோஜென் லங்கா மற்றும் கூல் பவர் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புகளுக்கு நன்றிசெலுத்துகின்றது. மேலும் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கும் இந்த தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்குமான அதன் முயற்சியில் சேர்ந்துகொள்ள எண்ணம் கொண்ட நபர்கள், அமைப்புகளுக்கு அழைப்பு விடுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago