2025 ஜூலை 24, வியாழக்கிழமை

உயிரியல் துறையில் புதிய உச்சத்தில் கிரீடன்ஸ் ஜீனோமிக்ஸ் நிறுவனம்

Editorial   / 2017 நவம்பர் 27 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நம் நாட்டின் உயிரியல் துறையில் முன்னணியில் திகழும் நிறுவனம் கிரீடன்ஸ் ஜீனோமிக்ஸ் நிறுவனம் (Credence Genomics Pvt Ltd) உலகளவில் தொற்று நோய் சார்பானப் பதிவுகளை பிரசுரிக்கும் BioMed Central (BMC) பயோமெட் சென்ரல் பதிப்பகத்தில் பிரசுரிக்கப்பட்டதை, தொடர்ந்து உயிரியல் துறையில் புதிய உச்சத்தை எய்தியுள்ளது. 

இந்நிறுவனம், புதுமையானதும் தனித்தன்மை வாய்ந்ததுமான, DNA நோயறிதல் சோதனைகள் அதிவேகமானதும் துல்லியமானதும் மற்றும் சமரசமற்ற உத்தரவாதத்துடன் கூடிய மருத்துவ சோதனை அறிக்கைகளை வழங்கக்கூடியது. இதன் மூலம் கிரீடன்ஸ் ஜீனோமிக்ஸ் நிறுவனம் (Credence Genomics Pvt Ltd) இலங்கையில் மட்டுமல்லாது, தெற்காசிய பிராந்தியத்தின் உயிரியல் மருத்துவ துறையில் புதியப் பரிமாணத்தை எட்டியுள்ளது. 

2011ஆம் ஆண்டில், வைத்தியர் வாஸ் ஞானம் தொடங்கிய உயிரியல் துறையில் ஆரம்பிக்கப்படட (startup) நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் இலங்கையில் மட்டுமில்லாது தெற்காசிய பிராந்தியத்தில், NSG மற்றும் DNA சார்பான துறையின் அபிவிருத்திக்கு முதலீடு செய்துள்ளது. 

இது மரபியல் விஞ்ஞானத்தை, 6 ஆண்டு கால கடுமையான ஆராய்ச்சி மற்றும் அதிநவீன தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. வைத்தியர் வாஸ் ஞானத்தினால் வழிநடத்தப்படட விஞ்ஞானிகள் மற்றும் ஐசிடி பொறியியலாளர்கள் அடங்கிய குழுவின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் அடுத்த தலைமுறை வரிசைமுறை (NGS) தொழில்நுட்பத்தின் மூலம் அனைத்து வாழ்க்கை வடிவங்களிலும் காணப்படும் நான்கு அடிப்படை காட்டுமான தொகுதிகளை டிஜிட்டல் தரவுகளாக பிரித்து காப்பாற்றிய தகவல்களை ஒரு சிலிக்கன் சிம்பிள் சேமித்து, சிக்கலான மென்பொருள் பின்தளத்தில் ஒப்பிட்டு நோய்தாக்கும் நுண்ணுயிர்களை அடையாளம் காண்பிக்கின்றது . 

மருத்துவ மரபணு சம்பந்தப்படட சர்வதேச அங்கிகாரங்கள் மற்றும் தரநிலைகளுக்கு இணைக்கப்பட்ட இந்த நோயறிதல் சோதனைகளை, நாடு முழுவதும் பல முன்னணி மருத்துவமைகள் மருத்துவ நிறுவனங்கள் உபயோகிக்க தொடங்கியுள்ளன. விரைவான தொற்று நோய் கண்டறிதல் பங்கிபாஸ்ட் (Fungifast) மற்றும் பக்டிபாஸ்ட் (Bactfast) ஆகிய சோதனைகள் 90சதவீத துல்லியமானதும் அதிவிரைவான சோதனை அறிக்கைகள் மூலம் குறுகிய கால அவகாசத்தில் பல்வேறு நன்மைகளை வழங்கி தமது செயற்றிறனை நிரூபித்துள்ளன. இச்சோதனைகள் எல்லாவிதமான மருத்துவ மாதிரிகளையும் பரிசோதிக்க கூடியது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .