2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

உறுதியான வளர்ச்சியைப் பேணும் யூனியன் அஷ்யூரன்ஸ்

Gavitha   / 2016 நவம்பர் 27 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுள்  காப்புறுதி வியாபாரத்தில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனம் உறுதியான நிதிப்பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. நிகர வழங்கிய தவணைக்கட்டணங்களின் பெறுமதி 6 பில்லியன் ரூபாயாகப் பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தப்பெறுமதி 20சதவீத வளர்ச்சி என்பதுடன், 2015இல் பதிவு செய்திருந்த 1.5 பில்லியன் ரூபாயுடன் ஒப்பிடுகையில், 190 மில்லியன் ரூபாயை நடப்பு ஆண்டில் பதிவு செய்திருந்தது.  

கடந்த ஆண்டின் பெறுமதியில், பொதுக் காப்புறுதி வியாபாரத்தின் 78சதவீத பங்குகளைக் கைமாற்றியிருந்தமை அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த கொடுக்கல் வாங்கலைத் தவிர்த்து, முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலாபப்பெறுமதியில் வீழ்ச்சி பதிவாகியிருந்தது, இதில் 2015 செப்டெம்பர் மாதத்தில் பங்குகள் மீளக்கொள்வனவு இடம்பெற்றிருந்தமையாலும், வட்டி வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டமையும் பங்களிப்பு வழங்கியிருந்தன.  

செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் நிறுவனத்தின் இலாபத்தில், ஆயுள் காப்புறுதி வியாபாரத்தின் மேலதிக பெறுமதி உள்ளடக்கப்படவில்லை என்பதுடன், அந்தப்பெறுமதி வருட நிறைவில் ஒன்று திரட்டப்படும்.  

2016 செப்டெம்பர் 30ஆம் திகதியன்று உள்ளவாறான, யூனியன் அஷ்யூரன்ஸின் ஆயுள் நிதியத்தின் பெறுமதி 30 பில்லியன் ரூபாயாக அமைந்திருந்தது. இதன் மூலமாக ஆரோக்கியமான மூலதன இருப்பு விகிதம் பேணப்படுவதுடன், வியாபாரத்தின் நிதியியல் உறுதித்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.  

சிரேஷ்ட பிரஜைகளுக்கு பிரத்தியேகமான சுகாதார மற்றும் ஆயுள் காப்புறுதி திட்டங்களை யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்திருந்தது. 50 – 70 வயதுக்குட்பட்ட பிரஜைகளுக்கு ஆயுள் மற்றும் சுகாதாரக் காப்புறுதிகளை வழங்கும் வகையில் இந்தத் தீர்வு அமைந்துள்ளது. நாடு முழுவதும் “வெற்றிக்கான பாதை” எனும் தொனிபொருளில் பிரசர ஊக்குவிப்பு செயற்றிட்டமொன்றையும் யூனியன் அஷ்யூரன்ஸ் ஆரம்பித்துள்ளது, இதனூடாக யூனியன் அஷ்யூரன்ஸ் தீர்வுகள் எவ்வாறு சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி, முதலீடுகள் மற்றும் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரான காலம் என வெவ்வேறு தேவைகளை எவ்வாறு நிவரத்தி செய்து கொள்ளலாம் என்பதாக அமைந்துள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .