2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உறுதியான வங்கி நாமமாக கொமர்ஷல் வங்கி தெரிவு

S.Sekar   / 2022 ஜூன் 04 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022ம் ஆண்டில், இலங்கையின் உறுதியான வங்கி நாமமாக கொமர்ஷல் வங்கி தெரிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் முன்னணி சுதந்திரமான வர்த்தக நாம ஆலோசனை சேவை நிறுவனமான பிரான்ட் பினான்ஸ், இலங்கையின் மிகச் சிறந்த பெறுமதி மிக்க உறுதியான வர்த்தக நாமமாக கொமர்ஷல் வங்கியைத் தெரிவு செய்துள்ளது.

இதன் மூலம் கொமர்ஷல் வங்கியின் வர்த்தக இலச்சினை இலங்கையில் சகல பிரிவுகளையும் உள்ளடக்கிய தெரிவில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. 2022 ஏப்ரலில் வெளியிடப்பட்டுள்ள 'பிரான்ட் பினான்ஸ் ஸ்ரீ லங்கா 100' என்ற வெளியீட்டின் மூலம் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ட் பினான்ஸ், கொமர்ஷல் வங்கி இலச்சினையை 46.7 பில்லியன் ரூபாய் பெறுமதியானது என மதிப்பிட்டுள்ளது. இது 2021ல் அதன் பெறுமதியிலும் பார்க்க 7 வீதம் அல்லது 3 பில்லியன்கள் அதிகமாகும். வங்கித் துறையில் மிகத் துரிதமாக பெறுமான வளர்ச்சி கண்ட வர்த்தக நாமமாக அது அமைந்துள்ளது ஏனையவை 3% வளர்ச்சியையே பதிவு செய்துள்ளன.

வர்த்தக முத்திரை உறுதிப்பாட்டுப் பிரிவில் கொமர்ஷல் வங்கியின் வர்த்தக முத்திரை உறுதிப்பாடு (BSI) 86.7 புள்ளியைப் பெற்றுள்ளது. இதற்கு AAA தரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டின் உயர்தரம் வழங்கப்பட்டுள்ள வர்த்தக இலச்சினையாக இது காணப்படுகின்றது. பெறுபேறுகளின் தொகுப்பில் ஸ்திரம் மிக்க வர்த்தக இலச்சினை எதிர் காலத்தில் மேலும் பெறுமதியை திரட்டக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான எஸ்.ரெங்கநாதன் இது பற்றிக் கூறுகையில் 'இன்றைய நிலை வர்த்தகங்களுக்கு மிகவும் சவால் மிக்க காலப்பகுதியாகும். இவ்வாறான சூழ்நிலைகளில் வளர்ச்சி காணக் கூடிய வர்த்தக முத்திரைகள் தொட்டுணரக் கூடிய வகையில் தமது வாக்குறுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் நாம் காணக் கூடிய விதத்தில் நிலைத்திருக்கக் கூடியவை. இந்த நிலை எப்போதும் கொமர்ஷல் வங்கியின் ஸ்திரப்பாட்டில் இருந்து வந்துள்ளது. எமது வர்த்தக முத்திரை பெறுமானத்தில் ஒவ்வொரு ஊழியரும் வாழ வேண்டம் என நாம் நம்புகின்றோம்' என்று கூறினார்.

கொமர்ஷல் வங்கிக் குழுமத்தின் பிரதான சந்தைப் படுத்தல் அதிகாரி ஹஸ்ரத் முனசிங்க தெரிவித்துள்ள கருத்தின் படி நோய்ப்பரவல் காலத்தில் கடுமையான வெளி சூழ்நிலைகளையும் மீறி வர்த்தக முத்திரையை கட்டியெழுப்பும் மூலோபாய செயற்பாடுகளில் வங்கி தொடர்ந்தும் ஈடுபட்டு வந்தது. 'வங்கியின் இந்த மூலோபாய வர்த்தக முத்திரை செயற்பாடானது வெறுமனே அதை பார்ப்பதோ அல்லது கேட்பதோ மட்டும் அல்ல. மாறாக கட்டி எழுப்பல், ஈடுபடல், பிரதான பங்காளிகளோடு அவர்களுக்கு தொடராக பெறுமானங்களை வழங்குவதன் மூலம் உறவுகளைப் பேணல் என்பனவற்றையும் உள்ளடக்கியது' என்று தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .