Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 21 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுத்தமான நீரின் அவசியத்தையும் நீர் வளங்களை நிலைபேறான முறையில் முகாமைத்துவம் செய்வதன் முக்கியத்துவத்தையும், முன்னிறுத்தி உலக நீர்த்தினமானது வருடாந்தம் மார்ச் மாதம் 22ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழ் இயங்கும் பரந்தன் கெமிக்கல்ஸ் நிறுவனமானது, நாட்டுக்கு அவசியமான சிறந்த குடிநீரை வழங்கிவரும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையுடன் இணைந்து நீர் தினத்தை கொண்டாடுவதில் பெருமிதமடைகிறது. பரந்தன் கெமிக்கல்ஸ் நிறுவனம் ஐந்து தசாப்த காலத்துக்கு மேலாக திரவ குளோரினை வெற்றிகரமாக விநியோகித்து வருவதுடன், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நாடளாவிய செயற்பாட்டில் இணைந்து செயற்படுவதில் பெருமிதமடைகிறது.
உலக நீர்த்தினத்தின் இவ்வருடத்திற்கான தொனிப்பொருள் “நீர் மற்றும் கழிவு நீர்” என்பதாக அமைவதுடன் இத் தொனிப்பொருளானது நாட்டின் நீர் சுத்திகரிப்பு மற்றும் கழிவு நீர் முகாமைத்துவத்திற்கு மிகவும் அவசியமான இரசாயனங்களை வழங்கிவரும் பரந்தன் கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பைக் காட்டுகிறது.
உலக நீர்த்தினத்தின் இவ்வருடத்திற்கான தொனிப்பொருள் ‘நீர் மற்றும் கழிவு நீர் “என்பதாக அமைவதுடன் இத் தொனிப்பொருளானது நாட்டின் நீர் சுத்திகரிப்பு மற்றும் கழிவு நீர் முகாமைத்துவத்திற்கு மிகவும் அவசியமான இரசாயனங்களை வழங்கிவரும் பரந்தன் கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் மிகவும் நெருங்கியத் தொடர்பைக் காட்டுகிறது.
பரந்தன் கெமிக்கல்ஸ் நிறுவனமானது நாட்டின் இரசாயனங்களை உற்பத்தி செய்தல் மற்றும் சந்தைப்படுத்துவதற்கான அரச நிறுவனமாகும். நிறுவனமானது குளோரின் தொடர்பில் ஏகபோக உரிமையை கொண்டுள்ளதுடன் (மொனோபொலி) நிறுவனமானது 1954ஆம் வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டது முதல் குளோரினுக்கான உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றது. வரலாற்று ரீதியில் நீர்ச் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரினேற்றம் செய்வதானது 1893இல் ஜேர்மனியில் நிகழ்ந்ததுடன் 1897ஆம் வருடத்தில் பிரித்தானியாவின் மெயிட்ஸ்டோன் நகரிலேயே ஆரம்பத்தில் முற்று முழுதாக நீர் வழங்களின் போது குளோரினால் சுத்திகரிக்கப்பட்டது.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago