Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 27 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டர்பில்லர், 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த 50 ஃபோர்ச்சூன் நிரலில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டுக்கான இந்தத் தரப்படுத்தலில் 47ஆம் இடத்தில் கட்டர்பில்லர் தரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 16 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக சிறந்த 50 நிறுவனங்கள் தரப்படுத்தலில் கட்டர்பில்லர் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறந்த 50 நிறுவனங்களை தெரிவு செய்வதற்காக சர்வதேச முகாமைத்துவ ஆலோசனை நிறுவனமான Korn Ferry Hay Group உடன் ஃபோர்ச்சூன் கைகோர்த்து, 3800க்கும் அதிகமான நிறைவேற்று அதிகாரிகள், பணிப்பாளர்கள் மற்றும் பங்குச்சந்தை ஆய்வாளர்களிடமிருந்து தாம் அதிகளவு போற்றும் 10 நிறுவனங்களைத் தெரிவு செய்யுமாறு கோரியிருந்தனர். கடந்த ஆண்டின் முதல் 25மூ நிலைகளில் தரப்படுத்தப்பட்டிருந்த நிறுவனங்களிலிருந்து தெரிவு செய்வதற்கான வாய்ப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
உலகின் மற்றும் சகல துறைகளிலும் விரும்பப்படும் மற்றும் மதிப்பை பெற்றுள்ள 10 நிறுவனங்களை இவர்கள் தெரிவு செய்திருந்ததைத் தொடர்ந்து, சிறந்த 50 நிறுவனங்களில் ஒன்றாகக் கட்டர்பில்லர் தெரிவு செய்யப்பட்டிருந்தது. புத்தாக்கம், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் சர்வதேச போட்டிகரத்தன்மை போன்ற வெவ்வேறு ஒன்பது நிலைகளிலிருந்து சொந்த துறையில் நிறுவனங்கள் தரப்படுத்தப்பட்டிருந்தன. நிர்மாணம் மற்றும் பண்ணை இயந்திரங்கள் துறையில் முதலாமிடத்தில் கட்டர்பில்லரை ஃபோர்ச்சூன் தரப்படுத்தியுள்ளது. 1998ஆம் ஆண்டு முதல் ஃபோர்ச்சூனின் துறைசார் தரப்படுத்தலில் வருடாந்தம் கட்டர்பில்லர் உள்ளடக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த துறையில் முதலாமிடத்தில் கட்டர்பில்லர் தரப்படுத்தப்பட்டுள்ளமை இதுவே முதல் முறையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஃபோர்ச்சூன் தரப்படுத்தலில் கட்டர்பில்லர் தரப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில், UTE ன் தலைவர் பிரசான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “ஃபோர்ச்சூன் கம்பனியாக நாம் தெரிவாகியுள்ளதையிட்டு மிகவும் பெருமையடைகிறோம். உலகின் போற்றுதலைப் பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ந்தும் தெரிவாகி வருகிறது. ஆறு தசாப்த காலத்துக்கு மேலாக CAT விநியோகஸ்த்தராக செயற்படுவதனூடாக, இந்த நாமத்தை உயர் மட்டத்தில் பேண நாம் முக்கிய பங்கை வழங்கி வருகிறோம்” என்றார்.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago