2025 ஜூலை 30, புதன்கிழமை

உள்நாட்டுச் சீனி உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 23 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டில் சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் நாட்டின் மொத்த சீனித்தேவையின் 50 சதவீதத்தை 2020இல் பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.   

இரு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ள சீனி உற்பத்தி மேம்படுத்தல் செயற்பாடுகளில் முதல் கட்டத்தில் நீண்ட கால அடிப்படையிலான நடவடிக்கைகளும், இரண்டாம் கட்டத்தில் நடுத்தவரளவு கால அடிப்படையிலான நடவடிக்கைகளும் உள்ளடங்கியுள்ளன. இந்தச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதுடன், கரும்புச் செய்கையை மேம்படுத்துவதற்கும் 15 புதிய சீனித்தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.   

1950ஆம் ஆண்டளவில் இலங்கையில் சீனி உற்பத்தி வியாபார மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், கரும்புச்செய்கை படிப்படியாகக் குறைக்கப்பட்டதன் காரணமாக இந்தத் துறை பின்னடைவை எதிர்கொண்டுள்ளது.

தற்போது நாட்டின் வருடாந்த சராசரி சீனித்தேவை 700,000 மெட்ரிக்தொன்களாக அமைந்துள்ளதுடன், உள்நாட்டு உற்பத்தி வருடாந்தம் 56,000 மெட்ரிக்தொன்களாக அமைந்துள்ளது. இலங்கையின் மொத்தத் தேவையில் எட்டு சதவீதத்தை மட்டுமே உள்நாட்டு உற்பத்தி நிவர்த்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .