2025 ஜூலை 24, வியாழக்கிழமை

எடிசலாட்டின் ஏற்பாட்டில், இணையத்தினூடாக கொடுமைப்படுத்தல்களை ஒழிக்கும் அமர்வு

Editorial   / 2017 நவம்பர் 27 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இணையத்தினூடாக இணைக்கப்பட்டுள்ள இன்றைய உலகில், இலத்திரனியல் தொடர்பாடல்களுக்கு உடனுக்குடன் எம்மால் பதில்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். எமது நாளாந்த செயற்பாடுகளை, வினைத்திறன் வாய்ந்த வகையில் முன்னெடுப்பதற்கு இது உதவுவதுடன், வெறுப்பூட்டும் செய்திகளை விரைவாக பரவச்செய்யவும் ஏதுவாக அமைந்துள்ளது. நபர் ஒருவரை பாதிப்பதாக இது அமையாமல், வெவ்வேறு தரப்பினரிடமிருந்து வெறுப்பூட்டும் பதிவுகளையும் பெறுவதாக அமைந்திருக்கும். இணையத்தினூடாக, கொடுமைப்படுத்தல் எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்த நிலை, இலங்கையில் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. எதிர்காலத்தலைமுறைக்கு, இது பெரும் பாதிப்பாகவும் அமைந்துள்ளது. இந்தச் சமூகப் பிரச்சினையை இனங்கண்டு, எடிசலாட் அண்மையில் இலங்கையில் இணையத்தினூடாக கொடுமைப்படுத்தலை இல்லாமல் செய்யும் அமர்வொன்றை தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. 

எடிசலாட் லங்கா வாடிக்கையாளர் அனுபவ பிரிவின் பணிப்பாளர் ரொமேஷ் டி மெல் இந்த அமர்வை முன்னெடுத்திருந்ததுடன், இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி, ஓழுங்குபடுத்தல் நிலையம் (இலங்கை CERT|CC) பிரதம நிறைவேற்று அதிகாரி லால் டயஸ், எடிசலாட் லங்கா சந்தைப்படுத்தல் பணிப்பாளர் யாதவ் மதியபரணம் மற்றும் அமாயா சூரியப்பெரும (Wonder Woman Cosplayer) ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 

எடிசலாட் லங்கா சந்தைப்படுத்தல் பணிப்பாளர் யாதவ் மதியபரணம் கருத்துத் தெரிவிக்கையில், “சமூக ஊடக வலைத்தளங்களில் காணப்படும் கருத்துச்சுதந்திரத்தை, எமது மக்கள் வேறொரு நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். தமது நண்பர்களை கொடுமைப்படுத்த இதை ஒரு சாதனமாக பல இளைஞர்கள் பயன்படுத்துவதை நாம் காண்கிறோம். இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. பொறுப்பு வாய்ந்த தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் எனும் வகையில், இந்த விடயம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த விடயம் தொடர்பான ஒழுக்கக்கோவை ஒன்றை நிறுவுவது எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும் கவனம் செலுத்துகிறோம்”  என்றார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .