2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

எப்சன்-மக்சர் நிறுவனத்துடன் கைகோர்ப்பு

Gavitha   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்   

கணினி அச்சியந்திரம், போட்டோபிரதி இயந்திரங்கள், இலத்திரனியல் பொருள்களின் பிரதான உற்பத்தி நிறுவனமான எப்சன் (EPSON), இலங்கையின் கிழக்கு மாகாணத்துக்கான வழங்கல் பங்காளராக, மட்டக்களப்பு மக்சர் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.  

இது தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் சுற்றுலா விடுதியில் எப்சன் இந்தியா நிறுவனத்தின் இலங்கைக்கான அலுவலர் எம்.சாய்ராம் தலைமையில் நடைபெற்றது.  

இந்த அறிமுக நிகழ்வில், அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.  

எப்சனின் இலங்கைக்கான முகாமையாளர் ஜெரோம் சுமித், எப்சனின் இலங்கைக்கான விற்பனை முகாமையாளர் எஸ்.சுரேன் ஆகியோர், எப்சன் உற்பத்திகள் அதன் பாவனைகள் தொடர்பில் விளக்கங்களை வழங்கியதுடன், மட்டக்களப்பு மக்சர் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.சி.எம்.அமீனுடன், எப்சனின் இலங்கைக்கான முகாமையாளர் ஜெரோம் சுமித், வியாபார நடவடிக்கைகளையும் ஆரம்பித்து வைத்தார்.   தாய்லாந்து, இந்தியா, மாலைதீவு, நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் உள்ளிட்ட உலகின் 90 நாடுகளில் கிளைகளைக் கொண்டு 67ஆயிரம் ஊழியர்களைக் கொண்டு இயங்கி வரும் எப்சன், கடந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் இலங்கைக் கிளையினை ஆரம்பித்திருந்தது.  

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் பங்காளர்களை இணைத்து, தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் எப்சன் நிறுவனம், கிழக்குக்கான பங்காளராக, மட்டக்களப்பு மக்சர் நிறுவனத்தினைத் தேர்வு செய்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X