Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 மே 18 , மு.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் அதி நம்பிக்கை வாய்ந்த நிதி நிறுவனங்களுள் ஒன்றும், புதுமை வழியிலான நிதித் தீர்வுகள் மற்றும் பலதரப்பட்ட லீசிங் வசதிகளை வழங்குபவர்களுமான எல்.பீ. பினான்ஸ் பி.எல்.சி
‘எல்.பீ. பிக் வீல்ஸ் மோட்டார் ஷோ 2018’ என்ற சிறப்பு நிகழ்வின் பிரதம அனுசரணையாளராகவும் உத்தியோகபூர்வ லீசிங் பங்காளியாகவும் செயற்படுகிறது.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தால் (VIASL) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘எல்.பீ. பிக் வீல்ஸ் மோட்டார் ஷோ’ 2018 மே 18, 19, 20ஆகிய திகதிகளில் கொழும்பு - 07 இல் உள்ள ‘நெலும் பொக்குன’வில் நடைபெறவிருக்கிறது.
இக்கண்காட்சியில் பல்வேறு வகையான சிறிய கார்கள், ஆடம்பர ‘செடான்’கள், சகல அளவுகளிலுமான SUV வாகனங்கள், சக்தி வாய்ந்த ஜீப் வண்டிகள் மற்றும் கார்களைக் காட்சிக்கு வைக்கும் 30க்கும் மேற்பட்ட கூடங்கள் அமைந்திருக்கும். இவற்றைத் தவிர, Hybrid மற்றும் மின்சார மொடல்கள் உள்ளடங்கலாக 200க்கு மேற்பட்ட புத்தம் புதிய மற்றும் மீளமைக்கப்பட்ட வாகனங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
இந்த மதிப்பார்ந்த நிகழ்வில், உத்தியோகபூர்வ லீசிங் பங்காளியாகக் கலந்துகொள்ளும் எல்.பீ. ஃபினான்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள், அங்கு தொடர்ச்சியாகத் தங்கியிருந்து வாகனங்களைக் கொள்வனவு செய்ய விரும்புவோருக்கு வழிகாட்டுதல்களையும் உடனடிச் சேவைகளையும் வழங்குவார்கள். வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்யும் உங்கள் கனவை நனவாக்குவதற்கு உதவும் வகையில், இணையற்ற சலுகைத் திட்டங்களை அவர்கள் முன்வைப்பார்கள். 46 வருடகால சேவை அனுபவத்தைக் கொண்டுள்ள எல்.பீ ஃபினான்ஸ், இக்காலப்பகுதியில், ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு வசதியான மற்றும் இலகுவான லீசிங் தீர்வுகளை வழங்கி வருவதன் மூலம், இத் தொழிற்துறையில் முன்னணி வகித்து வருகின்றது.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் ரஞ்ஜன் பீரிஸ், இந்தக் கண்காட்சி பற்றித் தெரிவிக்கையில், “தரமுயர்ந்த வாகனங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிவூட்ட விரும்புகிறோம். பிரதம அனுசரணையாளரான எல்.பீ. ஃபினான்ஸின் ஊடாக, நாம் வழங்கும் விசேட சலுகைகளைச் சாதகமாகப் பயன்படுத்தி, தமக்குத் தேவையான வாகனங்களைக் கொள்வனவு செய்யவுள்ள வாடிக்கையாளர்களுக்கு எம்மால் உதவக்கூடியதாக இருக்கும்” என்றார்.
எல்.பீ ஃபினான்ஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிரோஷன் உடகே தகவல் தருகையில், “இலங்கையிலுள்ள மிகவும் நம்பிக்கையான மற்றும் தரமுயர்ந்த மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் அமைப்பாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் விளங்குவதாலேயே, இந்த வாகனக் கண்காட்சியின் பிரதம அனுசரணையாளராகவும் உத்தியோகபூர்வ லீசிங் பங்காளியாகவும் இணைந்துகொள்ள எல்.பீ ஃபினான்ஸ் தீர்மானித்தது. வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த வாகனங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த இது உதவும். வாகனக் கண்காட்சி நடைபெறும் மூன்று தினங்களிலும் நெகிழ்வான லீசிங் திட்டங்களை உள்ளடக்கிய இணையற்ற சலுகைத் திட்டங்களை எல்.பீ. ஃபினான்ஸ் முன்வைக்கும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
20 minute ago
37 minute ago