2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

“எல்லைகளுக்கு அப்பால் வியாபிப்பதற்கு” தீர்வுகளை SLT-MOBITEL Enterprise அறிமுகம்

Freelancer   / 2024 மார்ச் 01 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, தனது SLT-MOBITEL Enterprise இன் புதிய திட்டமான “எல்லைகளுக்கு அப்பால் வியாபிப்பதற்கு” என்பதை நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு (MSMEs) அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக டிஜிட்டல் மாற்றத்தையும், தேசத்தின் பொருளாதார விருத்தியில் தமது பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதற்கும் முன்வந்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக, SLT-MOBITEL இனால், பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப தயார்நிலை மற்றும் உள்நாட்டு தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆற்றல் போன்றவற்றில் நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை எய்தக்கூடியதாக இருக்கும்.

அண்மையில் நடைபெற்ற நிறுவனசார் தயாரிப்பு அமர்வின் போது, SLT-MOBITEL Enterprise இனால் நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வியாபார உரிமையாளர்களுக்கு Cubkit web builder, Akaza HR, Akaza ERP போன்றன அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், பங்குபற்றுநர்களுக்கு இந்த தயாரிப்புகளுடன் ஈடுபாட்டை பேணும் வாய்ப்பும் வழங்கப்பட்டிருந்தது.

மேலும், மேற்படி SLT-MOBITEL இனால் நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு வழங்கப்படும் பரந்தளவு தெரிவுகளில் cloud, security மற்றும் connectivity தீர்வுகள் காணப்படுகின்றன. Cloud வழங்கல்களில் Enterprise Premium Cloud, Google Workspace, Eazy Storage, HOSTINGCUB போன்றன அடங்கியுள்ளன.

CUBKIT – Web Builder, மற்றும் CGaaS AI Platform. பாதுகாப்பு தீர்வுகள் உள்ளம்சங்களில் Windows Defender மற்றும் Kaspersky Endpoint Security solutions, மற்றும் connectivity தெரிவுகளில் FTTH Flash, One Shot Ultra, Secured Business Internet Line (BIL), AI SecureNet, Net Guard, மற்றும் Net Guard plus போன்றன அடங்கியுள்ளன.

SLT-MOBITEL இனால் வழங்கப்படும் தீர்வுகளினூடாக, நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு, வாடிக்கையாளர்களின் வியாபார தன்னியக்கமயப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தலை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவிகள் வழங்கப்படும். இவ்வாறான நிறுவனங்களுக்கு புத்தாக்கமான தொழில்நுட்பங்களை தமது செயற்பாடுகளில் உள்வாங்கவும், நீண்ட கால வினைத்திறனை ஊக்குவிக்கவும், நீண்ட கால நிலைபேறாண்மையை பேணுவதற்கும் SLT-MOBITEL க்கு ஆதரவு வழங்க முடிந்துள்ளது.

இலங்கையின் நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு பொருத்தமான வகையில் டிஜிட்டல் தீர்வுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய பொருளாதார சவால்கள் நிறைந்த சூழலில், உற்பத்தித்திறனை முன்னெடுத்துச் செல்வதற்கும், புதிய வாய்ப்புகளை திறப்பதற்கும், மீண்டெழுந்திறனை கட்டியெழுப்பவும் உதவுவதுடன், அதனூடாக தேசிய வளர்ச்சி மற்றும் தொழில் வாய்ப்புகள் போன்றவற்றில் நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும்.

“எல்லைகளுக்கு அப்பால் வியாபிப்பதற்கு” எனும் தொனிப்பொருளினூடாக, நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு தூர நோக்குடைய இலக்குகளை நிர்ணயிக்கவும், தமது எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் மாற்றங்களை கட்டமைத்துக் கொள்ளவும் முடிந்துள்ளது. எதிர்பார்ப்புகள் நிறைந்த உள்ளம்சங்களைக் கொண்டுள்ள SLT-MOBITEL, நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு துரித தொழில்நுட்பங்களை வழங்கி, தேசிய மீட்சிக்கு உறுதியான பங்களிப்பை வழங்கவும், cloud தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் வசதிகள் வழங்கப்படுகின்றன.

நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட கடந்த ஆண்டின் நிறுவனசார் தீர்வுகளின் வெற்றிகரமான செயற்பாடுகளைத் தொடர்ந்து, எதிர்வரும் ஆண்டில் தமது சேவை வழங்கல்களை மேலும் மேம்படுத்துவதற்கு SLT-MOBITEL தன்னை உறுதிப்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .