2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஏற்றுமதியாளர்களுக்கு நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி உதவி

Editorial   / 2018 நவம்பர் 21 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

26ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த NCE ஏற்றுமதி விருதுகள் வழங்கும் நிகழ்வின் பிரதான அனுசரணையை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வழங்கியிருந்தது. இந்நிகழ்வு கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.  

NCE ஏற்றுமதியாளர்கள் விருதுகள் 2018 நிகழ்வுக்கு பிரதான அனுசரணை வழங்கும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் தீர்மானத்தை உறுதி செய்து, உள்நாட்டு ஏற்றுமதியாளர்களின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கும் வகையில், SME வங்கியியல் பிரிவின் சிரேஷ்ட நிறைவேற்று பதில் தலைவர் பண்டார ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “மனித வரலாற்றில், சர்வதேச வியாபாரத்தின் முக்கியத்துவம் வளர்ச்சியடைந்துள்ளது. இலங்கையை பொறுத்தமட்டில், நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்கக்கூடியது. குறிப்பாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், சேவைகள் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருகின்றன. இதன் பின்புலத்தில், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி சௌகரியத்தை மீளமைத்து வருவதுடன், சர்வதேச வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களில் சேர்ப்பதற்கு பரிபூரண சேவைகளையும் தீர்வுகளையும் அறிமுகம் செய்த வண்ணமுள்ளது” என்றார். 

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “ஏற்றுமதியாளர்களுக்கான தேசிய சம்மேளனம் என்பது உள்நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு சேவையாற்ற, இலங்கையில் காணப்படும் ஒரே தனியார் துறை சம்மேளனமாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில், இந்த அமைப்பு படிப்படியாக வளர்ச்சியடைந்து, நாட்டின் ஏற்றுமதியாளர்களின் குரலாக மேலோங்கியுள்ளது. NCE வருடாந்த ஏற்றுமதியாளர் விருதுகள் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததனூடாக, NCE இனால் ஏற்றுமதியாளர்களுக்கு தமது தயாரிப்புகளை சந்தையில் வெளிப்படுத்துவதற்கும் தமது துறையில் பேணும் சிறப்புக்காக கௌரவிக்கப்படுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, எமது ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி இந்த அமைப்புடன் கைகோர்த்து செயலாற்றுவதையிட்டு பெருமை கொள்கிறது” என்றார்.  

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் உயர் அனுபவம் வாய்ந்த, அர்ப்பணிப்பான வியாபார சேவைகள் அணியினர், ஏற்றுமதியாளர், இறக்குமதியாளர்கள் மத்தியில் பெருமளவு நன்மிப்பை பெற்றுள்ளனர். துரிதமாகக் கொடுக்கல் வாங்கல்களைக் கையாளல், கவர்ச்சிகரமான பணப்பரிமாற்றல் பெறுமதிகள், ஆவணப்படுத்தல் உறுதிப்படுத்தலில் நிபுணத்துவம், போட்டிகரமான கட்டணங்கள் போன்றவற்றுக்காக இந்த அணியினர் நன்மதிப்பைப் பெற்றுள்ளனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X