2025 ஜூலை 30, புதன்கிழமை

ஏழு விருதுகளை வென்றுள்ளது செலிங்கோ லைஃப்

Princiya Dixci   / 2016 நவம்பர் 03 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016 தேசிய விற்பனை காங்கிரஸில் (NASCO) விற்பனைப் பிரிவு விருதுகள் உட்பட ஏழு விருதுகளை செலிங்கோ லைஃப் வென்றிருந்தது. இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) இந்தத் தேசிய விற்பனைக் காங்கிரஸை ஏற்பாடு செய்கின்றது.

ஆயுள் காப்புறுதித் துறையின் முன்னணி வகைப்படுத்தல் பிரிவில் மூன்று விருதுகள் உட்பட, பெறப்பட்ட இந்த விருதுகளில் இரண்டு தங்க விருதுகள், மூன்று வெள்ளி விருதுகள், இரண்டு வெண்கல விருதுகள் என்பன அடங்கும்.ஆயுள் காப்புறுதிப் பிரிவில் செலிங்கோ லைஃப்பின், குமாரி தனபால தங்கம் வென்றார். சகல பிரிவுகளுக்குமான, மிகச் சிறந்த பெண் விற்பனையாளருக்கான தங்கப் பதக்கம் இருவருக்கு

வழங்கப்பட்டது. அதில் ஒன்றையும் குமாரி பெற்றுக் கொண்டார். அதேபோல் சகல தொழில்துறைப் பிரிவுகளிலும் சிறந்த முன்னணியாளருக்கான வெள்ளி விருதும் இருவருக்கு வழங்கப்பட்டது. அதில் ஒன்றையும் அவர் பெற்று மூன்று விருதுகளை தட்டிக் கொண்டார்.  இது தவிர ஆயுள் காப்புறுதிப் பிரிவில் முன்னணி வகைப்படுத்தலில் சி.ஏ.ஆர். உபசேன வெள்ளி விருதையும், ஆயுள் காப்புறுதிப் பிரிவில் பிராந்திய முகாமைத்துவ வகைப்படுத்தலில் வெள்ளி விருதை அஞ்சுல சில்வாவும், ஆயுள் காப்புறுதி முன்னணி பிரிவில் எம். பிரியவிராஜ், விற்பனை நிறைவேற்றுத் துறையில் டபிள்யூ. பி.ஆர்.எம். சில்வா ஆகியோர் வெண்கல விருதுகளையும் வென்றுள்ளனர்.

“ஆயுள் காப்புறுதி என்பது மிகவும் தனிப்பட்ட ஒரு விடயமாகும். விற்பனையில் ஈடுபடுவோர் வெற்றி பெற வேண்டுமாயின் வாடிக்கையாளரின் நம்பிக்கையை வெல்ல வேண்டியது மிகவும் அவசியமானதாகும்” என்று செலிங்கோ லைஃப்பின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான, ஆர்.ரெங்கநாதன் கூறினார். “இதனால் தான் நாம் தொழில்சார் இயல்பின் அவசியத்தையும் விற்பனைக் குழு உறுப்பினர்களிடையே ஒருங்கிணைப்பையும் தொடர்ந்து வலியுறுத்துகின்றோம். உள்ளூர் ஆயுள் காப்புறுதிச் சந்தையில் செலிங்கோ லைஃப் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.இது ஏன் என்பதை இந்த விருதுகள் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளன” என்றார்.    

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .