Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச அளவில் அலுவலக இட வசதி ஏற்பாட்டுச் சேவைகளை வழங்கிவருகின்ற Regus, இலங்கையில், தனது புத்தம்புதிய மற்றும் ஏழாவது வர்த்தக மையத்தை அண்மையில் ஆரம்பித்துள்ளது.
2ஆவது மாடி, எஸ்.பீ. கட்டடம், இல. 192/10, 9ஆவது ஒழுங்கை நாவல வீதி, நாவல, கோட்டை என்ற முகவரியில் இந்த விஸ்தரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Regus ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜோன் ரைட், Regus இலங்கை அலுவலகத்துக்கான உள்நாட்டு தலைமை அதிகாரியான கலாநிதி நிர்மல் டி சில்வா ஆகியோர் புதிய மையத்தின் திறப்பு விழாவில் கலந்து சிறப்பித்தனர். மக்கள் மத்தியில் அதிக திறன் கொண்ட பணியக இட வசதி கலாசாரம் தொடர்பில் நெகிழ்ச்சிப்போக்குடனான அணுகுமுறைக்கான கேள்வி விரைவாக அதிகரித்து வருவதை இந்த விஸ்தரிப்பு புலப்படுத்துகின்றது.
இப்புதிய வர்த்தக மையத்தில் அதி நவீன பணியாளர் சபை அறை மற்றும் சமூக ஒன்றுகூடல் அறை வசதிகளும் உள்ளடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட அலுவலக இட வசதிகளுக்குப் புறம்பாக, புதிதாகத் தொழிற்பட ஆரம்பிக்கின்ற நிறுவனங்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களை விசேட இலக்காகக் கொண்டு ஒன்றாக இணைந்து பணியாற்றும் அலுவலக இட வசதிகளும் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நிறுவனங்களின் அளவு அல்லது அவற்றின் தொழிற்துறை என்ற வேறுபாடின்றி, 28 வெளியக தனிப்பட்ட அலுவலக இட வசதிகள் மற்றும் 11 உள்ளக தனிப்பிட்ட இட வசதிகள் போன்ற பல்வேறுபட்ட சேவைகளை தற்போது அனுபவிக்க முடிகின்றது. நவீன வசதிகளுடன் இணைந்த, 150 பேர் வரையில் உள்ளடக்கப்படக்கூடிய தனித்த தளம் ஒன்று பயிற்சி, நிகழ்வுகள் மற்றும் மாநாட்டு வசதிகளுக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை இந்த மையத்தின் மற்றுமொரு விசேட அம்சமாகும்.
Regus ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜோன் ரைட் கருத்து வெளியிடுகையில், “ஒரு சர்வதேச நிறுவனம் என்ற வகையில், தனிநபர்களுக்கு மிகவும் நெகிழ்வுப்போக்குடனான விதிமுறைகளுடன் சொந்தமாக அலுவலக இட வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளது மட்டுமன்றி, புதிதாக தொழிற்பட ஆரம்பிக்கும் நிறுவனங்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பல்தேசிய நிறுவனங்கள் என வர்த்தக உலகில் தமது அடிச்சுவட்டைப் பதிக்க விரும்புகின்ற அனைவருக்கும் தனது சேவைகளை வழங்கிவருகின்றது. எமது பிராந்திய மற்றும் சர்வதேச அடிச்சுவட்டில் இலங்கை மிக முக்கியப் பங்கு வகிப்பதுடன், இலங்கையில் எமது வலையமைப்பை மேலும் விஸ்தரிப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .