2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

ஐப் (JAB) சுத்திகரிப்பு கருவிகள் அறிமுகம்

Gavitha   / 2016 நவம்பர் 28 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெய்ற பிறஸ், தென் கிழக்கு ஆசியாவில் வாடிக்கையாளரின் தேவைக்கு ஏதுவாக ஒருங்கிணைந்த தூரிகைகளை உற்பத்தி செய்யும் பாரிய உற்பத்தியாளராகவும், இலங்கையின் முன்னனி தூரிகை ஏற்றுமதியாளராகவும் திகழ்கின்றது. அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் அவுஸ்திரேலியா அடங்கலாக மொத்தம் 20 நாடுகளின் சந்தைகளில் தனது தடங்களை வலுவாகப் பதித்த பின்னர் இந்தோனேஷிய நாட்டு சந்தையில் காலடி எடுத்து வைப்பதன் மூலம் மேலும் விரிவடைகின்றது. 

இந்தோனேஷியாவில் விரைவாகப் பெருகிவரும் 250 மில்லியன் பாரிய சனத்தொகையானது, நுகர்வு பொருட்களுக்கான கேள்வியை அதிகரிப்பதோடு, ஆண்டுக்கு 5 மில்லியனாகப் பெருகிவரும் நகர்புற நுகர்வாளர்களின் அதிகரிப்பையும் கருத்திற் கொண்டே அந்நாட்டை பெய்ற பிறஸ் தெரிவுசெய்துள்ளது. மேலும் அந்நாட்டின் சனத்தொகையானது, 2020களில் 270 மில்லியனை எட்டக் கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளதோடு எமது உற்பத்திபொருட்கள் ஜகார்த்தாவின் கரெவர், யயன்ட் எக்ஸ்ட்ரா, யயன்ட் எக்ஸ்ட்ரா மார்க்கட், லயன் சுப்பறின்டோ என்பனவற்றின் 210 விற்பனை மையங்களில் விற்பனைக்குவிடப்படவுள்ளதோடு, இந்தோனேஷியாவின் ஹைப்பர்மார்ட், லொட்டே சோப்பிங், லொட்டேமார்ட், ஜோகியா எஸ் எம், ராமாயன எஸ் எம், மித்ரா 10 மற்றும் கரிகரி ஆகிய சூப்பர் மார்க்கட்டுக்களிலும் விற்பனைக்கு விடப்படவுள்ளது.

எதிர்வரும் 12 மாதங்களில் இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளில் உள்ள, 600 விற்பனை நிலையங்களின் மூலம், எமது உற்பத்தி பொருட்களை விநியோகிக்க நிறுவனம் உத்தேசித்துள்ளது. நமது சூழல் நடப்பா சுத்திகரிப்பு கருவிகள் தொழில்சார் மற்றும் வீட்டு உபயோகங்கள் இரண்டுக்குமான சந்தையை இலக்கு வைத்து உற்பத்தி செய்யப்படுவதோடு, போட்டியாளர்களிடமிருந்து தெளிவான நன்மையுடைய சந்தை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டும் உன்னிப்பாகத் திட்டமிடப்பட்டுள்ளது. பெய்ற பிறஸ், பிபீபீஎல் ஹோல்டிங்ஸ் (BPPL Holdings) இன் முழு உரிமையுடைய துணை நிறுவனமாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .