2026 மே 06, புதன்கிழமை

ஐரோப்பிய ஒன்றியம், UNOPS நடவடிக்கை

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் நிறுவனம் ஆகியன, அரசாங்க நிறுவனங்கள் மற்றும் இதர அபிவிருத்திப் பங்காளர் அமைப்புகளுடன் இணைந்து சூழல் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் தொடர் கலை நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன.

2016ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தை குறிக்கும் வகையில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவி (EU-SDDP)  நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், இந்த செயற்பாடுகளுக்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் 60 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளன.

EU-SDDP நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்,UNOPS நிறுவனத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட திண்மக்கழிவு முகாமைத்துவத்தில்‘3R’கொள்கை ஊக்குவிக்கப்படுகிறது. இதில், உற்பத்தியாகும் கழிவுகளின் அளவைக் குறைத்தல், கழிவாக அகற்றப்பட்ட பொருட்களை மீளப் பயன்படுத்தல், கழிவுகளை மீள் சுழற்சிக்குட்படுத்தி, அவற்றை மாற்று வழியில் பயன்படுத்த உதவுதல். இந்த அனைத்து செயற்பாடுகளுக்கும் கூடிய அளவிலான சமூக பங்குபற்றல் அவசியமானதாக அமைந்துள்ளது.

இந்த இச்செயன்முறையில் மக்கள் தமது நிலைமையை புரிந்து கொள்ளும் நிலையில் மாத்திரமே இது சாத்தியமானதாக அமைந்துள்ளது. இதன் காரணமாக சூழலைப் பாதுகாப்பது தொடர்பில், குறிப்பாக  ஒருங்கிணைந்த திண்மக் கழிவு முகாமைத்துவத்தினூடாக கருத்தரங்குகள்,  UNOPS நிறுவனத்தினால் அமுல்படுத்தப்படுகின்ற வேலைத்திட்டத்தில் அத்தியாவசிமானதொன்றாக அமைகின்றது.

உலக சுற்றாடல் தினத்தை குறிக்கும் வகையில் பொதுமக்கள் மத்தியில் சூழல் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இலங்கை சூழலை பாதுகாக்கும் வகையில் நிலைபேறான செயற்பாடுகளான சேதன விவசாய முறைகள் மற்றும் முறையான கழிவு முகாமைத்துவம் போன்றவை சமூகங்கள் மத்தியில் ஊக்குவிக்கப்பட்டிருந்தன.

உலக வங்கியின் அங்கத்துவ அமைப்பான, IFC உடன் UNOPS நிறுவனம் இணைந்து மட்டக்களப்பில் விவசாயக் கண்காட்சியும் வியாபாரச் சந்தையும் (Agri Fair and Exhibition) கண்காட்சி நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன்மூலமாக, சேதன விவசாய முறைகள் ஊக்குவிக்கப்பட்டிருந்ததுடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுகள் மற்றும் வீட்டுப்பொருட்களை பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்கப்பட்டிருந்தனர். மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் என 5000க்கும் மேற்பட்டவர்கள், மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

இயற்கை மண் நிலைமைகள் மற்றும் உரங்கள், சேதன உணவு உற்பத்தி, சூழலுக்கு பாதுகாப்பான தொழில்நுட்பங்களான உயிர் வாயு உற்பத்தி மற்றும் கழிவு உருவாக்கத்தை குறைத்தல் தொடர்பான விவரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

UNOPS மற்றும் IFC ஆகியவற்றுக்கு மேலதிகமாக, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் (FAO), சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனம் (IWMI) உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனமான ஜனதக்ஷன், சர்வதேச அரச சார்பற்ற வேர்ள்ட் விஷன் மற்றும் ஒக்ஸ்ஃபாம், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சகல உள்ளூராட்சி சபைகள் மற்றும் வௌவேறு அரசாங்கத் திணைக்களங்கள் ஆகியன இந்தக் கண்காட்சியில் பங்கேற்று தமது அனுபவங்களை பகிர்ந்திருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .