Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூன் 21 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலேஷியா - மகா கருணா பௌத்த சங்கம், மலேஷியா - தேரவாத பௌத்த மன்றம், பாதுகாப்பு அமைச்சு, அனர்த்த முகாமைத்தவ அமைச்சு மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ஆகியவற்றின் பங்களிப்புடன் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும், ‘செனஹே சியபத’ செயற்றிட்டத்தின் மூலம் மாத்தறை மாவட்டத்தில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட களுபோவிடியான மகா வித்தியாலயத்துக்கான புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு, இதன் திறப்பு விழா ஜுன் மாதம் 13ஆம் திகதி நடைபெற்றது.
இந்தக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான செயற்றிட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு, 2017 மே மாதம் நடைபெற்றது.
களுபோவிடியான மகா வித்தியாலயத்தின் அன்பளிப்புச் செய்யப்பட்ட புதிய கட்டடத்தில் ஒவ்வொரு வகுப்பறைகளும் 80x25 அடி என்ற அளவில் கட்டப்பட்டுள்ளன.
மலேஷியாவின் தலைமை அதிகரண சங்க நாயக மற்றும் திராவிட பௌத்த கவுன்சில் ஆலோசகர் வண. புடேவத்தே சரணங்கர நாயக்க தேரர், மஹமேவுனா புத்த மடத்தின் ஆலோசகர் ஹினிதும நந்த தேரர், ஷர்தா தொலைக்காட்சி வலையமைப்பின் ஆலோசகர் வண. அலுதெனிய சுபோதி தேரர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் டபிள்யூ. ஏ. குலசூரிய, மலேஷியாவின் தேரவாத பௌத்த கவுன்சில் தலைவர் டென் லெங் ஹுவா,ஷர்தா ஊடக வலையமைப்பின் தலைவர் ரோஷான் வன்னிநாயக்க,பாதுகாப்பு அமைச்சின் துணை இயக்குநர் பதும் ஹேவகே,சிவில் பாதுகாப்புத்துறை கேணல் ஜி.டி.கே.எம் விஜயநாயக்க மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் ஊடக மற்றும் வர்த்தகப் பிரிவு பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க ஆகியோர் இந்தக் கட்டடத் திறப்பு விழாவில் பங்குபற்றினர்
இளைஞர் விவகாரங்கள், திட்ட மேலாண்மை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க அமெரிக்காவிலிருந்து தனது கருத்தைப் பின்வருமாறு தெரிவித்திருந்தார். “கடந்த வருடம் மண்சரிவால் பாதிக்கப்பட்ட களுபோவிடியான மகா வித்தியாலயத்தின் புதிய கட்டடத்தைப் பார்க்கும் போது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இத்தகைய சிறப்பு முயற்சியில் தங்களின் நேரத்தையம் முயற்சிகளையும் பங்கிட்டுக் கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்” எனக் கூறினார்.
களுபோவிடியான மகா வித்தியாலயத்தின் கட்டுமானப் பணிகளுக்காக ஷர்தா ஊடக வலையமைப்பு நிதியுதவி வழங்கியதுடன் மலேஷியா - மகா கருணா பௌத்த சங்கம், மலேஷியா - தேரவாத பௌத்த சபை ஆகியவற்றால் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் செயற்றிட்டத்துக்கு நிதியுதவியுதவி வழங்கப்படுவதுடன் சிவில் நிர்மாணக்குழுவினால் எவ்விதச் செலவும் இன்றி, இந்தக் கட்டடம் கட்டப்படுகின்றது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேற்பார்வையின் கீழ், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பங்களிப்புடன் இது இடம்பெற்றிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025