2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பங்குகள், குறூப் லீஸ் பப்ளிக் கம்பனி வசம்

Gavitha   / 2017 ஜனவரி 03 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்து பங்குச் சந்தையில் (SET) பட்டியலிடப்பட்டுள்ள ஒரு டிஜிட்டல் நிதிக் கம்பனியான குறூப் லீஸ் பப்ளிக் கம்பனி (GLPCL),கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. (CCF) நிறுவனத்தின் 29.99% பங்குரிமையை 70 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலருக்கு கொள்முதல் செய்துள்ளது. இக் கொடுக்கல் வாங்கல் ரூ. 10.56 பில்லியனுக்கு அதிகமானது என மதிப்பிடப்பட்டுள்ள அதேநேரத்தில், கொழும்புப் பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட மிகவுயர்ந்த பெறுமதிகளுள் ஒன்றாகவும் இது அமைந்துள்ளது.   

இதே செயற்பாட்டின் போது, CCF நிறுவனத்துடன் சேர்ந்து BG இன்வெஸ்ட்மென்ட் (பிரைவேட்) லிமிட்டெட் மற்றும் அதனுடன் தொடர்புபட்டக் கம்பனிகள், மியன்மாரில் இயங்கும் நுண்நிதியியல் நிறுவனமான BG மைக்ரோ  ஃபினான்ஸ் மியன்மார் கம்பனி லிமிட்டெட் (BGMM) இன் 100% பங்குரிiமையை GLPCL நிறுவனத்துக்கு 8.0 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் விற்பனைச் செய்திருக்கின்றன. CCF நிறுவனத்தின் 28.1% பங்குரிமை 2.284 அமெரிக்க டொலருக்கு மதிப்பிடப்பட்ட அதேநேரத்தில், தற்போது நிலவும் இலங்கை ரூபாவுக்கும் அமெரிக்க டொலருக்கும் இடையிலான 146.85 என்ற நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், ரூபா 330 மில்லியன் பெறுமதியானது எக கணிக்கப்பட்டது. CCF நிறுவனமானது இந்த கொடுக்கல் வாங்கலின் மீது, வரிகளுக்கு முன்னரான “பணமாக்கப்படாத இலாபமாக” (book profit) ரூ. 277.21 மில்லினை ஒதுக்கீடு செய்யும்.   

இதற்கு முந்திய கொடுக்கல் வாங்கல் பற்றி இவ்வருடம் செப்டெம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்னர், கிரியேஷன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஸ்ரீ லங்கா எல்.எல்.சி. நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ரூ. 1.68 பில்லியன் (12.8 மில்லியன் அமெரிக்க டொலருக்கு சமமான) முதலீடே, ஒரு நிதிக் கம்பனியில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய வெளிநாட்டு முதலீடாகக் காணப்பட்டது.

“GLPCL நிறுவனத்துடன் பங்காளியாக ஒன்றிணைகின்றமைத் தொடர்பில் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றது. அதேநேரத்தில் முதலீட்டுதல், ஒன்றிணைந்த பலம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றுக்கானப் பல வாய்ப்புக்களைக் கொண்டுள்ள இந்த முதலீட்டின் ஊடாக நீண்டகால அடிப்படையிலான பரஸ்பர வெற்றியளிக்கும் பங்காளித்துவத்தை நாம் காண்கின்றோம்” என்று கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் பிரதம தொழிற்பாட்டு அதிகாரியான ரஜிவ் காசி செட்டி தெரிவித்தார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X