2026 மே 07, வியாழக்கிழமை

கிராமிய வலுவூட்டலில் ஒரு தசாப்த பூர்த்தி

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலோன் டொபாக்கோ கம்பனியின் முன்னணி சமூகப்பொறுப்புணர்வு செயற்றிட்டமான, நிலைபேறான விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (SADP) இந்த ஆண்டு தனது ஒரு தசாப்த கால கிராமிய வலுவூட்டல் செயற்பாடுகளைப் பூர்த்தி செய்துள்ளது. இந்த மைல்கல்லை குறிக்கும் வகையில், வருடாந்த (SADP) சந்தை கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வை BAT தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் சயிட் ஜாவிட் இக்பால் மற்றும் சிலோன் டொபாக்கோ கம்பனியின் தலைவர் சுசந்த ரத்நாயக்க ஆகியோர் அங்குரார்ப்பணம் செய்திருந்தனர். இந்நிகழ்வில் சிலோன் டொபாக்கோ கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், முகாமைத்துவ பணிப்பாளருமான மைக்கல் கொயெஸ்ட் மற்றும் ஏனைய பணிப்பாளர்களும் ஊழியர்களும் பங்குபற்றியிருந்தனர்.

SADP நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அனுகூலம் பெறும் குடும்பங்களினால் உற்பத்திச் செய்யப்படும் தயாரிப்புகள் SADP சந்தையில் காட்சிப்படுத்தப்படும், நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்படும் சேதன பயிர் விளைச்சல்களை விவசாயிகளிடமிருந்து சிலோன் டொபாக்கோ கம்பனி ஊழியர்களுக்கு கொள்வனவு செய்து கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

இந்தத்திட்டம் தொடர்பில் சிலோன் டொபாக்கோ கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான மைக்கல் கொயெஸ்ட் கருத்துத் தெரிவிக்கையில், 'நாடு முழுவதையும் சேர்ந்த பின்தங்கிய நிலையில் காணப்படும் குடும்பங்களுக்கு வலுவூட்டும் செயற்பாடுகளை SADP நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுத்திருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக, கிராமிய மட்டத்தில் வறுமை ஒழிப்புக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கியிருந்தது.

ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு, இந்தத்திட்டத்தினூடாக நிலைபேறான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பளித்திருந்தது. இந்த சந்தையின் மூலமாக, விவசாயிகளுக்கு தமது உற்பத்திகளை சிலோன் டொபாக்கோ கம்பனி தலைமையகத்தில் விற்பனை செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் எமது ஊழியர்களுக்கு பங்களிப்பு வழங்குவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டிருந்தது' என்றார்.

சிலோன் டொபாக்கோ கம்பனியின் SADP என்பது, ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டமாக அமைந்துள்ளது. 16 மாவட்டங்களைச் சேர்ந்த, 18,000 துக்கும் அதிகமான குடும்பங்களின் 71,000 துகும் அதிகமான அனுகூலம் பெறுநர்களைச் சென்றடைந்துள்ளது.

'தமக்கு உதவ தயாராகவுள்ளவர்களுக்கு உதவிகளை வழங்குவது' எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் அனுகூலம் பெறுவோர் மத்தியில் வறுமை நிலையிலிருந்து மீண்டு, நிலைபேறான வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்பிக் கொள்ள உதவியாக அமைந்திருப்பது இலக்காக அமைந்துள்ளது.

SADP திட்டத்தின் கீழ், சூழல் மற்றும் உயிரியல் மூலங்கள் பாதுகாக்கப்படுவது முக்கிய அங்கமாகும். சேதன பயிர்ச்செய்கை ஊக்குவிக்கப்படுவதுடன், கொம்போஸ்ட் உரப்பாவனை மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட களை பரிபாலனக் கட்டமைப்புகள் போன்றவற்றின் மூலமாக இரசாயன பசளைகள் மற்றும் கிருமிநாசினிகள் பாவனையை தவிர்க்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .