2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

குறைந்த விலையில் E-tel திறன்பேசி

Gavitha   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

E-tel, நம் நாட்டு வாடிக்கையாளர்களுக்குப் புதியதொரு அனுபவத்தைப் பகிரும் வகையில் மனங்கவர் பல வர்ணங்களில் கவர்ச்சிகரமான E-tel N7 VEGA, வகை திறன்பேசியைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. MMC வர்த்தக நாமத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி E-tel தொழில்நுட்பத்திலான E-tel N7 VEGA திறன்பேசிகள் சந்தையில் மிகக் குறைந்த விலையைக் கொண்ட, 4G திறன்பேசி வகையாக அமைந்துள்ளது என நிறுவனம் அறிவித்துள்ளது.

மாற்றங்களை மிக எளிதில் உள்வாங்கிக்கொள்வதில் திறன் படைத்தவர்களாக உள்ள புதியத் தலைமுறை, அலைபேசி பாவனையாளர்களின் தேவைகளை மிகச் சரியாக இனங்கண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கவர்ச்சிமிகு திறன்பேசிகள், அதி நவீன தொழில்நுட்ப அம்சங்கள் பலவற்றை கொண்டுள்ளன.

4.5 அங்குல மிகத் தௌிவான தொழிநுட்பம் Android 6.0 (Mashmellows)  அதிக ஆயுளைக் கொண்ட 1750mAh பற்றரி, 8GB+1GB, Light Sensor, GPS/Maps/youtube, Quad-core 1.3 Ghz Cortex – A732 bit Processor-Wi-Fi/Wi-Fi Hotspot, 32 GB ஒத்துழைப்பு போன்ற அதி நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய E-tel N7 VEGA திறன்பேசிகளை உத்தரவாதத்துடன் கொள்வனவு செய்ய முடிவதோடு, அது வாடிக்கையாளர்களுக்குப் புதியதொரு தொழில்நுட்ப அனுபவமாக இருக்கும் என்பது உறுதி. கவர்ச்சியானதும் தெளிவானதுமானப் புகைப்படங்களை எடுக்கக்கூடிய 5MB ப்ளாஷருடன் கூடிய முன்புற கமராவை E-tel N7 VEGA கொண்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X