2025 ஜூலை 26, சனிக்கிழமை

கிளிபோசேட் இறக்குமதிக்கு தடை

Gavitha   / 2017 மார்ச் 02 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள கிளிபோசேட் இறக்குமதிக்கு, இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பெருந்தோட்ட உரிமையாளர்கள் தேயிலைத்தோட்டங்களுக்கு உரமாக பயன்படுத்துவதற்காக கிளிபோசேட் இறக்குமதியை மேற்கொள்ள அனுமதியளிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.  

நாட்டின் வெவ்வேறு பாகங்களில் கொடிய சிறுநீரக நோய் ஏற்படுவதற்கு இந்தக் கிளிபோசேட் பாவனை காரணமாக அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதியினால் தடை பிறப்பிக்கப்பட்டிருந்தது.  

தேயிலை பெருந்தோட்டங்களில் களைகளை அகற்றுவது மிகவும் செலவீனம் நிறைந்த செயற்பாடாக அமைந்துள்ளமையால், களைநாசினியான கிளிபோசேட் இறக்குமதிக்கு அனுமதியளித்து அவற்றை பெருந்தோட்டங்களில் மட்டும் பயன்படுத்த அனுமதியளிக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியிருந்தனர்.  

ஐரோப்பா உள்ளடங்கலாக பெருமளவான நாடுகளில், கிளிபோசேட் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையிலும் இந்நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X